“அரசின் பணத்தில் கட்சி வேலை .. திமுக நாட்டிலியே இருக்க கூடாது” - நயினார் கடும் தாக்கு..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கு சரியாக உள்ளது காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி கூறிய கருத்துக்கு ...
nayinar nagendiran
nayinar nagendiran
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க இங்கு அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் தற்போது வரை மும்முனை போட்டிதான் நிலவுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி  அதிமுக மாற்றம் அதன் கூட்டணி மற்றும் தவெக. ஆனால் இத்துணை போட்டிகள் இருந்தாலும் அரசியல் களம் திமுக -விற்கு சாதகமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக திடீரென பாஜக -வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமித்ஷா நேரில் வந்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். ஆனால் திமுக -வை வீழ்த்த இது போதாது என எடப்பாடிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அதிமுக நிர்வாகிகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை “தம்பி விஜய் வர வேண்டும் என தாம்பூலம் வைத்து  அழைத்தனர். ஆனால் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை விஜய் சமீபத்தில் நடந்த செயற்குழுவில் மறுத்திருக்கிறார் . ஆனாலும் கூட அனைவருக்குமான கதவை திறந்துவிடும் நோக்கத்தில் ‘தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு’ எடப்பாடி அழைப்பு விடுத்தும் மறுதலிக்க பட்டுள்ளார்.

இந்த நிலையில் திருச்சியில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார் 26ஆம் தேதி மாலை தூத்துக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் மேலும் 4500 கணக்குத் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

அன்று இரவுத் தொடர்ச்சியில் தங்கி அடுத்த நாள் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்...

தமிழர் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் அன்பு கொண்ட மாபெரும் தலைவராக பாரத பிரதமர் நரேந்திர மோடி.ராஜேந்திர சோழன் எப்படி உலகமெல்லாம் சுற்றி படையெடுத்து வெற்றி பெற்றாரோ அதேபோன்று உலக நாடு முழுவதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி சுற்றிவிட்டு வெற்றி வாகை சூடி வருகிறான் அவரை வரவேற்க நாங்கள் தயாராகி வருகிறோம்..

தேர்தலுக்கு இன்னும் 8 மாத  காலம் இருக்கிறது நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மக்கள் விரோத சக்தியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கக் கூடாது  சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது இதெல்லாம் இல்லாத ஒரு அரசை உருவாக்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கு சரியாக உள்ளது காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி கூறிய கருத்துக்கு பதிலளித்த நயினார்  திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 படுகொலைகள் நடந்துள்ளது எங்கு சரியாக உள்ளது? என்று அவரிடம் நீங்களே கேளுங்கள். தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. எப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அவர் சொல்கிறார் என்றார், எல்லாம் அவர் வீட்டில் நடந்திருந்தால் அவருக்குத் தெரியும் யாருக்காக இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார் கே எஸ் அழகிரி என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பட்ட முறையில் எனக்கு நெருங்கிய நண்பர் எனது தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செய்து கொடுத்தவர் அவரின் உடல் நலம் பூரணமாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன் மருத்துவமனையில் இருந்து கொண்டு கோப்புகளை பார்த்து அலுவல் பணிகளை மேற்கொள்கிறார் என்றால் அதை நான் முழுமையாக வரவேற்கிறேன்...

அதேபோன்று உங்களுடன் ஸ்டாலின் என்பதை நான் எதிர்க்கிறேன் அரசு செலவில் இவர்களது கட்சி வேலையை நடத்துகிறார்கள்  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொள்கை பரப்புச் செயலாளர்களாக நியமித்துள்ளார்கள் அந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள் தான், எப்படி இதை ஒற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை வேறு யாராவது இருந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றிருப்பார்கள் இதை எப்படி அனுமதிக்க முடியும்.

நாங்கள் இரண்டு கோடி சேர்த்து விட்டோம் மூன்று கோடி சேர்த்து விட்டோம் ஐந்து கோடி உறுப்பினர்களை சேர்த்து விட்டோம் என்று சொல்வது ஈஸி தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் எப்படி அப்படி சேர்க்க முடியும்…? ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது போன்று திமுகவினர் உறுப்பினர் சேர்த்து வருகிறார்கள் என சாடினார்.

ஓரணியில் தமிழ்நாடு என்பது அவசியம் இல்லாத ஒன்று   இந்தியாவில் எல்லா மாநிலங்கள் போல தமிழகத்தில் நாம் எல்லாருமே ஓர் அணியில் தான் இருக்கிறோம் இது வெற்று வார்த்தை ஜாலம் மக்களை ஏமாற்றக்கூடிய வேலை.

அதிமுக - பாஜா கூட்டணி பலவீனமாக உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, முதலமைச்சரைப் பார்த்து யாரும் உங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறதா என கேட்க மாட்டேங்கிறீர்கள் எங்களை மட்டும் தான் கேட்கிறீர்கள்? எங்கள் கூட்டணி பலமாகத்தான் உள்ளது

முதல்வர் வருகிறார் என்றால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எதை செய்தாலும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை ஆனால்  எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எது செய்தாலும் அதனை தடுப்பதற்கு வேகமாக வருவார்கள் அப்படிப்பட்ட ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது.  2026  -ல் இந்த ஆட்சி மாறும்..

2026 இல் கூட்டணி ஆட்சி தான் அமையுமா என்ற கேள்விக்கு?

என்னைப் பொறுத்தளவில் திமுக இந்த நாட்டில் இருக்கக் கூடாது

குர்ஆன் மீது சத்தியமாக பாஜகவோடு கூட்டணி இல்லையென தவெக ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு? குர்ஆன் பகவத் கீதை பைபிள் போன்றவற்றை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என பாஜக மணிலா தலைவர் நயினார் பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com