

மதுரையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது.. “மிசா விவகாரம் தொடர்பான கேள்விக்கு விளக்கம் கொடுத்திருந்தார். அதில் “திமுக ஏன் இப்படி "ரியாக்ட்"செய்கிறார்கள் என தெரியவில்லை. இதில் Controversy ஒன்றுமில்லை. அவர் மிஷாவில் கைது செய்யப்பட்டாரா? இல்லையா என்பதுதான் கேள்வியே. மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு Detention Order உள்ளது. ஆனால் ஸ்டாலினுக்கு Detention ஆர்டர் உள்ளதா? இதுவரையில் எல்லா document-டை எடுத்து காண்பிக்கிறார்கள். ஆனால் Detention காபி இல்லை. திமுகவினர் இரண்டு மூன்று டாக்குமெண்டை வெளியிட்டுள்ளார்கள், அது சர்க்காரியா கமிஷன் போட்ட விசாரணை Copy என்று சொல்கிறார்கள். முரசொலியில் யாரோ ஒருவர் எழுதியதை கொண்டு வந்து ஆதாரமாக காட்டுகிறார்கள். Detention Copy இல்லாத ஒரே தியாகி ஸ்டாலினாக தான் இருப்பார்” என்று முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
“இவரை மீண்டும் மீண்டும் தியாகியாக Project செய்வதால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை வேறு ஏதோ காரணத்தினால் கைது செய்யப்பட்டார்கள் என்பது 30, 40 ஆண்டு கால சர்ச்சை” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு பெரிய தியாகி கைதானார் என்றால் ஏன் Detention Copy அழிக்கப்பட்டது?” என்றும் “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆதாரம் கிடைக்கக்கூடாது என்று அழித்ததாக சொல்கிறார்கள். முக்கிய பத்திரிகை செய்திகளை பார்த்து அவரை தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது” என்றும் சர்ச்சைகுரிய கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து பேசினார். அதில் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பளார் குறித்தும் விமர்சித்து உள்ளார். “பரந்தாமன் உள்ளூரில் விலை போகவில்லை, எழும்பூரில் அவர் இருந்த காலங்களில் தொகுதி பக்கமே போகவில்லை. உள்ளூரில் விலை போகாத பரந்தாமனை மதுராந்தகத்தில் விட்டுள்ளார்கள். நாளை திமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் பரந்தாமன் தான் காரணம் என்று கூறுவார்கள். எப்போதே தோல்விக்கான காரணத்தை தேடி விட்டார்கள். 100, 200 கோடி வந்து திருமங்கலம் ஃபார்முலா போல தேர்தலை சந்திப்பார்கள். ஆனால் அதை வாங்கிக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இடைத்தேர்தலில் திமுக, அதிமுக டெபாசிட் கூட வராது அதற்கு காரணமாக பிறந்தவன் போன்ற ஆட்கள் தான். எழும்பூர் தொகுதியிலேயே செல்லவில்லை என்று பரந்தாமனை மக்கள் விரட்டி அடித்தார்கள். உள்ளூரில் ஆள் இல்லாததால் வெளியூரிலிருந்து வேட்பாளரை அறிவித்துள்ளார்கள்.
திமுக இன்று அறிவித்துள்ள போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “திமுக அறிவித்துள்ள போராட்டம் யாருக்கும் தெரியாது. அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் போராட்டம் செய்வார்கள். நன்றாக போராட்டம் செய்யட்டும். அவர்களுக்கு திறந்தவெளி மைதானமே தரப்படும். பொதுமக்கள் எல்லோரும் பார்த்து சிரிக்கிறார்கள்” என விமர்சித்தார்.
மேலும், திமுக மீண்டும் மு.க. ஸ்டாலினை மிகப்பெரிய தியாகியாக முன்னிறுத்த முயற்சித்தாலும், அதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், “இரா. செழியன் மொழிபெயர்த்த புத்தகம் என்னிடம் உள்ளது. அதில் ஒரு இடத்தில்கூட இவ்வளவு பெரிய தியாகி ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை, எழுதப்படவில்லை. இங்கு இல்லையென்றால் வேறு எங்கு இருக்கும்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து திமுகவை விமர்சித்த நிர்மல் குமார், “திமுகவை மக்கள் தூக்கி எறிந்து பல நாட்கள் ஆகிவிட்டது” என்றும் கூறினார். முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “தொழில் ரீதியான நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே திட்டமிட்டபடி லண்டன் சென்றுள்ளார்” என்றார். இதனிடையே, புதிய தலைமைச் செயலகத்தை பட்டினம்பாக்கத்தில் அமைக்கக் கூடாது என இடதுசாரிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்காமல் சென்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.