"திமுக-வின் ஆதரவு.. தேசத்திற்கே ஆபத்து" - தொகுதி மறுவரையரை விவகாரத்தில் ஸ்டாலின் கொடுத்த ட்விஸ்ட்! கொந்தளிக்கும் விசிக தலைவர் திருமா

கடந்த ஏப்ரல் மாதத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை 'கறுப்புச் சட்டம்' என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடியை ஏற்றி, அதன் நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DMK delimitation bill support
DMK delimitation bill support
Published on: 
Updated on: 
2 min read

தொகுதி மறுவரையரை மசோதாவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் "திமுக-வின் ஆதரவு நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்து" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மாற்றி அமைப்பது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்றாலும், அது தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நசுக்கும் செயலாக மாற வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தொகுதி மறுவரையறை குறித்து எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, மக்கள்தொகை அடிப்படையில் புதிய தொகுதிகளை உருவாக்குவது, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது போன்ற முக்கியமான அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களுடன் இந்த விவகாரம் இணைக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த விவரத்தினை பொறுத்தவரையில், இதற்கு முன்பு தமிழ்நாட்டினை ஆட்சி செய்த திமுக தொகுதி மறுவரையறையை தீவிரமாக எதிர்த்து வந்தது. மேலும், தற்போது மக்களவையில் 39 இடங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. அதாவது, 7.18%. ஆனால் சமீபத்திய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுகணக்கிட்டால், தமிழ்நாட்டின் விகிதப் பங்கு குறைந்து, மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கையும் குறையக்கூடும் என்பதே தென்னிந்திய மாநிலங்களின் அச்சமாக இருந்தது.

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் தற்போதைய 7.18% மக்களவைப் பங்கு எந்த நிலையிலும் குறையக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார். மேலும், 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலான மாநிலங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவ விகிதம் மேலும் 25 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரினார். தற்போது, திமுக இந்த தொகுதி மறுவரையறை விவகாரத்தில் என்ன சொல்ல போகிறது?. என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்று எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், தற்போது திமுக தனது பதிலை தெரிவித்துள்ளது.

தாங்கள், இந்த தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது. இந்த பதிலானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை 'கறுப்புச் சட்டம்' என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடியை ஏற்றி, அதன் நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது கருத்தினை தெரிவித்த திருமாவளவன், "திமுக எடுத்திருக்கின்ற நிலைப்பாடு, இந்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விடவும் பெரும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழ்நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்தும். ஆனால், இன்று திமுக எடுத்துள்ள நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு நிலைப்பாடு. சங்பரிவார்களின் சதி அரசியலுக்கு துணைபோகும் ஒரு நிலைப்பாடாக இது இருக்கிறது. ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்கின்ற சங் பரிவார்களின் சதி அரசியலுக்கு இது வழிவகுக்கும்" என்று திமுக தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு தெரிவித்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

திருமாவளவன் மட்டுமின்றி தவெக-வின் IT Wing "ஸ்டாலின் என்கிற சாவர்க்கர் 2.0" என்று திமுக தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு தெரிவித்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

DMK delimitation bill support
DMK delimitation bill support

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.