

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கடந்த நவ.20 தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனை மதுரை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றாததால் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நேற்று விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கடுமையாக கண்டத்தை பதிவு செய்தனர். மேலும் நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியமாகக் கையாளும்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும், இத்தகைய சூழல்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சார்ந்த குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, நவம்பர் 28-ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்காவிலிருந்து குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில் நின்று பக்தர்கள் ஒவ்வொருவரும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்காவின் பாதுகாப்புப் பொறுப்பை மத்திய ரிசர்வ் காவல் படையான CRPF-யிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக காவல்துறையினர் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன், திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் குழுவைத் தற்காலிகமாக செயல்படவிடாமல் நிறுத்தி, அதன் பொறுப்புகளை முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் டிசம்பர் 15-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் நிர்வாகச் சீர்குலைவு நிலவுவதாகவும், அதிகாரிகள் தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மேலும் பக்தர்கள் அனைவரும் மலைக்குச் சென்று தீபம் ஏற்றலாம், தர்காவுக்கும்,திருப்பரங்குன்றம் உரிய பாதுகாப்பு வழங்க சி.ஆர்.பி.எப்க்கு உத்தரவு வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, மலை உச்சியில் இருக்கக்கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான மரப்பலகை கொண்டு சாரம் கட்டும் பணிகளை பணியாளர்கள் துவங்கி இருக்கின்றனர். மேலும் திருப்பரங்குன்றத்தை சுற்றி 130-க்கும் அதிகமான சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 24 அன்று, திருப்பரங்குன்றத்திற்கு 144 தடை வித்தித்து பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந்திருந்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தடையை மீறியவர்கள் கைதும் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் இந்த சூழலை தமிழக அரசு எப்படி கையாளயம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று மாலை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்பட்ட உள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மாற்றுப்பட கருத்தில் இருக்கும் நிலையில் தமிழக அரசியலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் சற்று பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்