“தவெகவினரிடம் இருந்து பெண்களைக் காப்பாற்றுங்கள்” - MP கனிமொழியின் பதிவால்… இணையத்தில் கிளம்பிய விவாதம்!

தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது
kanimozhi about TVK
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு நிலை குறித்து கேள்விகள் நாள்தோறும் எழுந்து வருகிறது. நேற்று தூத்துக்குடியில் 2 பெண்கள் கடத்தப்பட்டது வரை நாள்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமீபத்திய குற்ற செயல்களில் தவெக நிர்வாகிகள் மீதும் தொடர் குற்றசாட்டுகள் அதிகரித்து வருகிறது. 

சென்னை ஆலந்தூரில் கடந்த ஜூன் மாதம், திருமணமாகி கணவரை இழந்து தனியாக வசித்து வரும் பெண்ணிடம் ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றி கழக (தவெக) செயலாளராக இருந்த வேம்புலி வீடு புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் வந்தது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி ஏரல் பகுதியில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் தவெசு நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் பள்ளிக்கரணை தவெக பகுதி செயலாளர் முகேஷ் மற்றும் திருத்தணி பகுதியைச் சேர்ந்த தவெக மேற்கு மாவட்ட செயலாளர் டில்லிபாபு ஆகியோர் திருமணம் ஆன பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் கணவர் புகார் அளித்திருந்தனர்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர், அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சசிகுமார் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வீடியோ ஆதாரங்களைக் காட்டி மிரட்டியதாகவும், கர்ப்பமாக்கிய பின்னர் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து இது போல் தவெக நிர்வாகிகள் மீது குற்றசாட்டுகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில், மழையில் பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் காரில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. தக்கலை மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்திகளை எல்லாம் மேற்கோள் காட்டி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது X தளத்தில், “Protect women from TVK” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பல்வேறு தவெக தொண்டர்கள் திமுகவினர் மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்து கொந்தளித்து வருகிறார்கள். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com