“காங்கிரஸ் த.வெ.க- வுக்கு ஆதரவு அளிக்கிறதா?” - நீண்ட நாட்களுக்கு பிறகு பாஜகவை நேரடியாக விமர்சித்த விஜய்.. நெல்லையில் எமோஷனல் ஸ்பீச்!

மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவை கூட தொட எனக்கு அவசியம் இல்லை
tvk meeting nellai
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியின் தலைவர்களும் தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் தேர்தல் அறிவித்த பிறகு அடுத்தடுத்து மூன்று தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று திருநெல்வேலி பிரச்சாரம் செய்துள்ள விஜய் திமுகவை நீண்ட நாட்களுக்கு பிறகு பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இதை பேசிய விஜய் “இப்போது ஸ்டாலின் முழு அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்த பிரச்சாரம் நடந்திருக்காது, முட்டுக்கட்டை போட்டு தடுத்திருப்பார். நம் மீது அதிக அவதூறுகளை பரப்பி விட்டார்கள், திமுக குட்டையும் பாஜக கூட்டணியும் வெளியில் தனியாக இருகிறார்கள், ஆனால் இருவரும் ஒன்று தான். மக்களுக்கு நிற்க இந்த விஜய் வரக்கூடாது என்பதுதான் நோக்கம். காரணம் விஜய் வந்த பிறகு அவர்களால் ஊழல் செய்ய முடியாமல் போய்விட்டது. கூட்டணி கட்சிக்காரர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட மாட்டார்கள் அப்படி இருக்கிறது திமுக கூட்டணி".

tvk meeting nellai

பாஜக கூட்டணி கட்சிகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும் மறைமுக கூட்டணிக்கும் நம் மீது காண்டு. இதற்கு காரணம் அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் கேட்கிறது தான், தமிழ்நாட்டின் காங்கிரஸை பணத்தை கொடுத்து தன்னுடன் சேர்த்து கொண்டார் ஸ்டாலின் ஆனால் உண்மையான காங்கிரஸ் நமது பக்கம் தான் இருக்கிறது. விஜய் மதசார்பற்ற உண்மை முகமாக இருப்பதால் திமுகவிற்கு பாஜகவிற்கு என் மீது காண்டு. இதற்கு காரணம் அரசியலுக்கு வந்து ஒவ்வொரு வீட்டிற்கு செல்லவில்லை, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்றுவிட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கேன்.

ஜனநாயகன் படத்தை முடக்கினால் நான் கவலைப்படுவேன் என நினைத்தனர், ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை பின்னர் SOP வைத்து முடக்க நினைத்தார்கள் அதற்கும் நான் அசரவில்லை.. என்னை சுற்றி இருப்பவர்களை வைத்து காத்திருந்து தேர்தல் நெருங்கும் போது அவதூறுகளை பரப்பினார்கள் எதற்கும் நான் அடங்கவில்லை… நான் ஒவ்வொரு வேட்பாளர்களையும் தேர்தெடுத்து நிறுத்தியுள்ளேன் அவர்கள் வெற்றி பெற்றால் உங்கள் வீட்டில் ஒருவர் வெற்றி பெற்றது போல, எனவே விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.

ஒரு எம்ஜிஆர்… ஒரு காமராஜர்… தான் இருக்க வேண்டுமா என்ன? நமது கட்சி நேர்மையான தலைவர்கள் போல செயல்படுவோம். தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் அனைவரும் நன்றாக இருப்போம் பார்த்து ஓட்டு போடுங்கள். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவை கூட தொட எனக்கு அவசியம் இல்லை.. இது போன்று ஆட்சியில் இருப்பவர்களால் சொல்ல முடியும். ஒழுங்கான ஆட்சி நடத்தியிருந்தால் பெண்களின் பாதுகாப்பு ஏன் இப்படி இருக்கிறது, கஞ்சா போதை தலைவிரித்து ஆடுகிறது. இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதுக்கு உங்கள் பதில் என்ன?

ஆட்சி முழுக்க ஊழல் நாறிக்கிடக்கிறது எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்பீர்கள்? மக்களே ஏப்ரல் 23 தேதி மறக்காமல் முதல் ஆளாக சென்று விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்… உங்களை நான் பொய் சொல்லி ஏமாற்றமாட்டேன்.. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேணும்.. நான் வேணுமா? உங்கள் பிள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com