

தமிழக தேர்தல் களம் தேர்தல் பிரச்சாரத்தால் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேரடியாக சென்று மக்களை சந்தித்து அங்குள்ள பிரச்சனைகளை கேட்டு, வாக்குறுதிகளை அளித்து மக்களோடு நேரடி இணைப்பில் இருக்க முயற்சித்து வருகிறார்கள். மக்களும் தங்களுக்கான வேட்பாட்களுக்கு வரவேற்பு அளித்து மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மாற்று அரசியல் செய்ய போவதாக சொல்லி களமிறங்கிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரும்பாலான மாவட்டங்களில் சென்று மக்களை சந்திக்காமல் பிரசாரத்தை ரத்து செய்து வருகிறார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்தாலும், கட்சியின் பரப்புரை முகாமில் எதிர்பார்த்த உற்சாகம் காணப்படவில்லை.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் விஜய் சென்று வாக்கு சேகரிப்பது என்பது சாத்தியமில்லாததாக இருக்கிறது. இந்த நிலையில், தவெக பரப்புரையின் வேகம் குறைந்து இருப்பது கட்சியினரிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற இருந்த பரப்புரை கூட்டமே திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது மற்றும் ஏற்கனவே தி.நகர், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளிலும் இதே போன்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேட்பளர்களும் தொடங்களுக்கும் பல கேள்விகள் எழுந்துள்ளது. இதனால், வேட்பாளர்களும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத ஒன்றை திருச்சி வேட்பாளர்கள் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று தவெக வேட்பாளராகப் போட்டியிடும் நவல்பட்டு விஜி திருவெறும்பூரில் இருந்து சிறந்த வெளி வாகனத்தில் விஜய் போன்று உருவம் பொறித்த பொம்மையுடன் 500க்கும் மேற்பட்ட தவெக கட்சியினருடன் திருவெறும்பூர் தொகுதியின் தேர்தல் அலுவலகமான திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் திருவெறும்பூர் தொகுதி அலுவலருமான கே.அமுதா அவர்களிடம் தாக்கல் செய்தார். பின்பு வேட்பாளர் விஜய்யின் பொம்மையுடன் வந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இவர் தனது தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட விதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் விஜய்யின் உருவ பொம்மையை வாகனத்தில் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாக மாறியுள்ளது. இதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து களமிறங்கியுள்ளார். ஆனால், அவரது பரப்புரை குறுகிய நேரத்திற்கு மட்டுமே நடைபெறுவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சில இடங்களில் சில நிமிடங்கள் மட்டுமே பேசி முடித்துவிடுவது , எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான உரையையும் வழங்குவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மற்ற அரசியல் கட்சியினரையும், அதன் கூட்டணி குறித்தும் கேலி செய்வதற்கு பதிலாக தனது வாக்குறுதிகள் மற்றும் செயல் திட்டங்களை விளக்கி பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில், திருவெறும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜயகுமார், விஜய் நேரில் வர மாட்டார் என்ற எண்ணத்தில், அவரது பொம்மையை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பொம்மை அருகே நின்று கை கூப்பி வாக்கு கேட்கும் இந்த காட்சி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதிலும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனை பார்த்த பலரும், “இப்படி ஒரு பரப்புரையால் எப்படி வெற்றி பெற முடியும்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், தவெக தனது பரப்புரை அணுகுமுறையை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.