"ஆளும் கட்சி மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்!” பல இடங்களில் நடக்கும் ரெய்டு.. பரபரப்பில் திமுக - பழிவாங்குகிறதா தவெக?

ஏழு குழுக்களாக 35 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
DMK former minister
DMK former ministerDMK former minister
Published on
Updated on
1 min read

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கம்பன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி, கரண் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், ஜீவா வேலு இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் திமுக முன்னாள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஏழு குழுக்களாக 35 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கல்லூரி வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படாததால் உள்ளே வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இந்த சோதனையானது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. எ.வ. வேலு 2016ல் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர். தற்போது திருவண்ணாமலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்று 7 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளாரனென்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவரது வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

இது குறித்து, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X தள பக்ககத்தில், "திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com