அதிமுக மாநாடு: சென்னை-மதுரை ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி!!

அதிமுக மாநாடு: சென்னை-மதுரை ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி!!
Published on
Updated on
1 min read

ஆகஸ்ட் 20  ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநட்டை முன்னிட்டு தொடர் ஜோதி  ஓட்டத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், இந்த மாநாட்டிற்கு அதிமுகவினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மாநாடு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் மாநாடு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து மாநாட்டின் தொடக்கப் பாடலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தற்பொழுது இந்த பிரச்சார வாகனம் அனைவரையும் மாநாடுக்கு அழைக்கும் விதமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரை வரை நடைபெறும் மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இந்த நடைபயணத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சென்னையில் இருந்து மதுரையை நோக்கி செல்கின்றனர்.

சென்னையில் தொடங்கிய இந்த பயணம், மாநாடு நடைபெறும் நாளில் மதுரையை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com