“15 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை!” - SC, ST மாணவர்களுக்கு அமைச்சர் வன்னி அரசு புதிய அறிவிப்பு

"ரூ.1350 வழங்கப்பட்ட B.A. (இளங்கலை) உதவித்தொகை இந்த கல்வி ஆண்டு முதல் ரூ.11250 எனவும்"
 SC/ST students scholarship
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் சமூக நீதி துறை அமைச்சர் வன்னிஅரசு கல்வி உதவித்தொகை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதற்கான அரசாணையை அமைச்சர் வன்னி அரசு வெளியீட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணங்களை உதவித்தொகையாக வழங்குவது போன்று, சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் பயிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கட்டாய மற்றும் திரும்ப செலுத்தப்படாத கட்டணங்களின் கல்வி உதவித்தொகை 15 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்படுகிறது.

அதில் ரூ.1350 வழங்கப்பட்ட B.A. (இளங்கலை) உதவித்தொகை இந்த கல்வி ஆண்டு முதல் ரூ.11250 எனவும், ரூ.1350 M.A. (முதுகலை) உதவித்தொகை ரூ.12000 எனவும் உயர்த்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து ரூ.2850 வழங்கப்பட்ட B.Com., (இளங்கலை வணிகவியல்) மற்றும் B.Com (Hons), B.Sc., மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.11250 ஆக உயர்த்தப்படுகிறது.

ரூ.4750 Β.Β.Α. உதவித்தொகை தற்போது ரூ.11250 ஆகவும், M.Com., M.Sc., உதவித்தொகை ரூ.2850 லிருந்து ரூ.12000 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதியதாக 11 இளங்கலை படிப்புகளும் (UG), 10 முதுகலை படிப்புகளும் (PG), 2 பட்டய படிப்புகளும் (Diploma) சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த உதவித்தொகை அதிகரிப்பின் மூலம், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார். சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில், அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களின்  குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.2,50,000/-க்கு உள்ளவர்களுக்கு அனைத்து கட்டாய மற்றும் திரும்பப் செலுத்தப்படாத கட்டணங்களும் கல்வி உதவித்தொகையாக வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com