ஒரே ஒரு வாக்கு மட்டும் பதிவான வாக்குச்சாவடியா?.. நாங்குநேரி இரட்டைக் கொலைக்கு நீதி வேண்டி தேர்தல் புறக்கணிப்பு!

மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சந்திக்கவில்லை என்றும் கூறி கிராம மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்
Nanguneri Election boycot
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் காலை 7 மணி தொடங்கி சிறப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் கத்தி வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமை வெகுவாக பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மதியம் 1 மணி நிலவரப்படி 56.71% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகளும்,  அரசியல் கட்சி நிர்வாகிளிடையே சிறு சிறு வாக்குவாதங்களும் நடந்து வருகிறது. அதை காவல் துறையும் சரியாக கையாண்டு வருவதாக தெரிகிறது.

இதற்கிடையில் நாங்குநேரி தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் யாரும் காலை முதலே வாக்களிக்க வராமல் தேர்தலை முற்றிலும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே நெல்லையில் உள்ள நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கி சுமார் 7 மணி ஆகியும் பொதுமக்கள் வாக்களிக்க வராதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிக்கும். சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290வது வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஒருவரும் வரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில் 969 வாக்காளர்கள் வசிக்கும் நிலையில் ஓட்டுப்போட யாரும் முன்வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது..

கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி நாங்குநேரியில் நடந்த இரட்டை கொலை தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்காகும். ஆதிக்க சாதி மனப்பான்மையுடன் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில், மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் அவரின் நண்பர் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சாதியக் கொலை மற்றும் போதிய நடவடிக்கை இல்லாததை கண்டித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து மற்றும் அந்த ஊர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்திற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நாங்குநேரி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு முறையான ஆறுதல் வழங்கவில்லை என்றும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சந்திக்கவில்லை என்றும் கூறி கிராம மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அவர்களிடம் தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய அரசைக் கண்டித்து, இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை (ஏப்ரல் 23, 2026) ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதாக ஊர் பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், கிராமத்தின் முடிவை மீறி பெண் ஒருவர் திடீரென வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். அதற்கும் அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வந்து தனது வாக்கை செலுத்தியுள்ளார். தற்போது அந்தப் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிராம மக்களின் இந்தப் பிடிவாதமான தேர்தல் புறக்கணிப்பு முடிவும், கள்ள ஓட்டு புகாரும் நாங்குநேரி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக சில பகுதியை சேர்ந்த மக்கள் அங்கே நடந்த சம்பவத்தில் ஆளும் கட்சியின் அலட்சியத்தை சுட்டி கட்டி தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தும் ஊரில் பதாகை வைத்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இது கவனிக்க பட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனையாக மாறி வருகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com