மதுராந்தகத்தில் மரண அடி.. தாராபுரத்தில் தடுமாற்றம்.. எடப்பாடி அஸ்தமனம் ஆரம்பம்?

‘தீர்ந்துபோன கட்சி’ என விமர்சித்த தவெகவை ஒரு தொகுதியிலாவது வீழ்த்தினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படும்.
Setback for EPS: TVK Takes Lead Over AIADMK in Key By-Election Constituencies
மதுராந்தகத்தில் மரண அடி.. தாராபுரத்தில் தடுமாற்றம்.. எடப்பாடி அஸ்தமனம் ஆரம்பம்?
Published on: 
Updated on: 
2 min read

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில், காலை 10 மணிக்கே கொண்டாட்டத்துக்குத் தயாராகி வந்தது அதிமுக. ஆனால், தாராபுரம் தொகுதியின் 5-வது சுற்று முடிவுகள் அதிமுகவுக்குத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

மதுராந்தகம் தொகுதியில் முன்னிலையில் இருக்கும் தவெக 27,185 வாக்குகளைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ள அதிமுக, தவெக பெற்ற வாக்குகளில் பாதிக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. ஆனாலும், அதிமுக அலுவலகம் கொண்டாட்டக் கோலம் பூசத் தொடங்கிவிட்டது.

கடந்த முறை 34.95% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற தொகுதியில், தற்போது படுதோல்வியைச் சந்தித்துள்ளபோதிலும், அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கத் தொடங்கிவிட்டனர்.

ஸ்வீட் பெட்டிகள் இறக்கப்பட்டு, அதிமுகவினர் மகிழ்ச்சியில் திளைக்கக் காரணம், தாராபுரம் தொகுதியில் தென்பட்ட வெற்றி முகம்தான்.

‘தீர்ந்துபோன கட்சி’ என விமர்சித்த தவெகவை ஒரு தொகுதியிலாவது வீழ்த்தினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படும்.

கடந்த பொதுத் தேர்தலில் வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தது அதிமுக. இது எடப்பாடி பழனிசாமியின் மிகப் பெரிய தோல்வியாகக் கருதப்பட வேண்டும் என ஒரு தரப்பினரும், தவெகவின் பெரிய வெற்றிக்கு மத்தியிலும் இத்தனை இடங்களை வென்றது சாதனை என மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர்.

அடுத்ததாக, திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க முயன்றதாகச் செய்திகள் வெளியானதால், எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி மேலும் அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து, மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி. சத்யபாமா (தாராபுரம்), எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) என அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக்கூடத் தக்கவைக்க முடியாத தலைவராக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தனர்.

இந்த நிலையில், தாராபுரத்தில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்கூட, அதை எடப்பாடி பழனிசாமியின் சாதனையாக முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு உள்ளது.

ஏற்கெனவே கட்சியின் நிலைமையால் சோர்வடைந்திருக்கும் தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அந்தச் சூழலைத் தவிர்க்க, எடப்பாடி பழனிசாமி தன்னைத் தலைவராக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான வாய்ப்பாக ஒரு சிறிய வெற்றி கிடைத்தால்கூடப் போதும் என்பதுதான் அதிமுக தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால், தாராபுரத்தில் ஐந்தாவது சுற்றுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது ஏழு சுற்றுகள் முடிவில், தவெக வேட்பாளர் சத்யபாமா 18,690 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 17,773 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

Setback for EPS: TVK Takes Lead Over AIADMK in Key By-Election Constituencies
தாராபுரத்தில் எடப்பாடி 'கம்பேக்..' தட்டி தூக்கும் அதிமுக.. தவழ்ந்து வரும் திமுக.. நிலைமை மாறுமா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com