

2026 சட்ட மன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தொடங்கியது. வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் பரப்புரையை தொடங்கியதை அடுத்து நேற்று தாம்பரத்தில் நடந்த அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், செய்யூர் தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் ,செங்கல்பட்டு தொகுதி வேட்பாளர் கஜேந்திரன், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் பல்லாவரம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அதன்பின் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக தலைமை ஸ்டாலின் அதிமுகவை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வைத்ததை சுட்டி கட்டி பதிலளித்தார். “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி கடையை விரித்து வைத்துக் கொண்டு கூட்டணிக்கு வாங்க வாங்க என கூவி கூவி அழைப்பதாக” விமர்சித்திருந்தார் ஸ்டாலின். அதற்கு ஈபிஎஸ் “ஸ்டாலின் அவர்களே நாங்கள் யாரையும் கூவி கூவி அழைக்கவில்லை தானாகவே எங்களுடன் வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். உங்கள் கூட்டணி அப்படி இருக்கிறதா? எப்பொழுது பார்த்தாலும் ஸ்டாலின் பேசுவார்.. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி கொள்கை கூட்டணி என்பார் அது கொள்கை கூட்டணியா? திமுகவும் காங்கிரசும் ஒரே கொள்கையா திமுகவும் கம்யூனிஸ்டும் ஒரே கொள்கையா திமுகவும் விடுதலை சிறுத்தையும் ஒரே கொள்கையா ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. தமிழ்நாட்டில் கொள்கை கூட்டணி அதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஏன் பாண்டிச்சேரியில் எதிர்த்து போட்டியிடுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். மேலும் “ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை மாறுகின்ற கட்சி திமுக கட்சி” என்றும் “பச்சோந்தி என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் அது கூட சில நேரம் கழித்து தான் தன் நிறத்தை மாற்றும் ஆனால் அடிக்கடி நிறம் மாறக்கூடிய ஒரே கட்சி திமுக” என்றும் விம்சித்திருந்தார்.
அதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்தும் விமர்சித்திருந்தார். மேலும் கொரோனா காலம் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது ஒரு வருடம் வீணாக கூடாது என்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மிக மன உளைச்சலை கவனத்தில் கொண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரையும் ஆல் பாஸ் செய்து விட்டேன். அதையடுத்து ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தினோம் இதுதான் அண்ணா திமுக ஆட்சியின் வரலாறு” என்றும் குறிப்பிட்டார். “இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு ஆண்டில் 11 அரசு கல்லூரி அரசு மருத்துவமனை கொண்டு வந்த வரலாறு கிடையாது அந்த வரலாற்றை படைத்தது அண்ணா திமுக அரசாங்கம் தான்” என்றும் பேசியிருந்தார்.
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என ஸ்டாலின் கேட்கிறார் இதை மக்களிடத்தில் கேட்டால் திமுகவை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் கனவு என்பார்கள்” என்றும் விமர்சித்திருந்தார். “நாங்கள் பாஜகவிற்கு அடிமை என்றால் 1999இல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக இணைந்து தேர்தலை சந்தித்ததே அதை என்ன சொல்வீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2001 இல் சட்டமன்ற பொதுத்தேர்தல் அதிலும் பாஜக திமுக கூட்டணி இருந்தது அவர்களெல்லாம் கூட்டணி வைத்தால் அடிமை இல்லை நாங்கள் கூட்டணி வைத்தால் அடிமையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இன்று மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.