கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரை .... சுற்றுலா படகு சேவை இன்று துவக்கம்...!

கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரை ....  சுற்றுலா படகு சேவை இன்று துவக்கம்...!
Published on
Updated on
1 min read

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை இன்று துவக்கம் ,கன்னியாகுமரி முதல் வட்டகோட்டை வரையிலான 6 கடல்மைல் தொலைவு வரை படகு சேவை இயக்கப்பட உள்ளது - இந்த சேவையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் துவங்கி வைத்தனர். 

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பணிகள் வருகை தருவது வழக்கம். இங்கு கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக குமரி மாவட்ட இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலான 6 கடல் மைல் தொலைவு வரை சுற்றுலா படகு சேவை இன்று துவங்கியது. கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் நவீன சொகுசு படகு சேவை ஐ இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.

சுமார் 8.2 கோடி ரூபாய் செலவில் தாமிரபரணி மற்றும் திருவள்ளுவர் என்ற 2 நவீன சொகுசு சுற்றுலா படகுகள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது, தாமிரபரணி சுற்றுலாபடகு முழுவதும் குளிரூட்டப்பட்ட 75 இருக்கைகள் கொண்டுள்ளது. திருவள்ளுவர் படகில் மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன அதில் 19 இருக்கை குளிரூட்டப்பட்டதாக உள்ளது.

இந்த படகு சேவைக்கான கட்டணமாக : ஏ.சி இருக்கைகளுக்கு 450 ரூபாயும், ஏசி இல்லாத இருக்கைகளுக்கு 350 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக செயல்படும் இந்த படகு சேவை சுற்றுலா பயணிகளின் வரவேற்பை கருத்தில் கொண்டு தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் , சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வாங்கப்பட்ட இந்த படகுகள் , நீண்ட காலமாக செயல்படாமல் இருந்தது தற்போது இந்த சேவை துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com