
கரூரில் நடந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது, விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைக 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாமரைக்கண்ணன் (25) கரூர், ஹேமலதா (24) விஸ்வநாதபுரி, சாய்லெட்சனா(8) விஸ்வநாதபுரி, சாய் ஜீவன் (4) விஸ்வநாதபுரி, சுகன்யா (33) கரூர், ஆகாஷ்(23) கரூர்,தனுஷ் குமார் (24)கரூர், வடிவேல்(54) கரூர், ரேவதி(52) ஈரோடு, சந்திரா(40) கரூர், குருவிஷ்ணு(2) கரூர், ரமேஷ்(32) கரூர்,சனுஜ்(13) கரூர்,ரவிகிருஷ்ணா(32) கரூர்,பிரியதர்ஷினி(35) கரூர், தரணிகா(14) கரூர்,பாலினியம்மாள்(11) கரூர், கோகிலா(14) கரூர், மகேஸ்வரி(45) மணிமங்கலம்,அஜிதா(21) கரூர், மாலதி(36) கரூர், சுமதி(50) கரூர், மணிகண்டன்(33) திருப்பூர், சதீஷ் குமார் (34) ஈரோடு,கிருதிக் யாதவ் (7) கரூர், ஆனந்த்(26) கரூர், சங்கர் கணேஷ்(45) திண்டுக்கல், விஜயராணி(42) கரூர், கோகுலப்பிரியா(28) திருப்பூர், பாத்திமாபானு(29) திண்டுக்கல், கிஷோர்(17) கரூர், ஜெயா(55) கரூர், அருக்காணி(60) கரூர், ஜெயந்தி(43) புகளூர்.
மேலும் 5 நபர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தாய், தந்தை, குழந்தை என தங்களது குடும்பத்தினரை இழந்து உறவினர்கள் கதறும் காட்சிகள் காண்போரின் கண்கலங்க செய்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் 10 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இதுவரை 19 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களின் உடல்கள் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.