ஜெம் வீரமணி POCSO வழக்கு.. "மெகா பிரபலத்தின்" மகனை சுற்றிவளைக்கும் போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தாச்சு!

வியாசார்பாடியை சேர்ந்த இவரது மகன் பிரகாஷிற்கு விபச்சார தடுப்பு பிரிவு காவலர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்
gem veeramani pocso case
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ஜெம் வீரமணி வழக்கில் SRMU தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ்க்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் தற்போது வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதை தடுக்க இந்த லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெம் கிரானைட் தொழில் அதிபர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் அரசியல் தலையீடு இருப்பதாக வெளிவந்த செய்திகளால் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த குற்ற செயல்களை மூடி மறைப்பதற்கு பல கோடி மதிப்பிலான பணம் கைமாறியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த வழக்கில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி பெயர் இடம்பெறாமல் இருக்க தனது உதவியாளர் கணேசன் மூலம் ரூ.70 கோடி செட்டில்மென்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.  இந்த போக்சோ வழக்கில் இருந்து தப்பிக்க கடந்த காலங்களில் காவல் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.70 கோடி செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ECR-ல் உள்ள சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்றதாகவும், அந்த பணம் நேரடியாக அவரின் உதவியாளரான கணேசனின் வங்கி மூலம் கைமாறியதும் தெரியவந்துள்ளது. மேலும் கணேசனின் போனில் சிறுமியை பாலியல் துன்புறுத்தும் வகையில் வீடியோ இருந்ததாகவும்,  அதைதொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தற்போது இந்த வழக்கில் மேலும் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உதவியாளர் கணேசனின் நண்பனும் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகனுமான பிரகாஷுக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கண்ணையா கடந்த 2024 ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர். வியாசார்பாடியை சேர்ந்த இவரது மகன் பிரகாஷிற்கு விபச்சார தடுப்பு பிரிவு காவலர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரகாஷ் தற்போது இந்தியாவில் இல்லை என்று சொல்லப்படுகிறது. வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றாரா அல்லது வேறு காரணமாக வெளிநாட்டில் இருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தன அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரகாஷிடம் சிறுமிகள் சம்மந்தமான வீடியோ இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இவருக்கும் பணம் கைமாறிய விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com