“மகளிர் விடியல் பயணம்” 881 கோடி முறை இலவச பயணம்… சுய உதவி குழுக்களுக்கு 1,41,818 கோடி கடன் தொகை ஒதுக்கீடு - இடைக்கால பட்ஜெட்!

சுய உதவி குழுக்கள் மகளிரின் உற்பத்தி பொருட்களின் விற்பனையை பெருக்கிட “வாழ்ந்து காட்டுவோம்” ...
“மகளிர் விடியல் பயணம்”  881 கோடி முறை இலவச பயணம்… சுய உதவி குழுக்களுக்கு 1,41,818 கோடி கடன் தொகை ஒதுக்கீடு - இடைக்கால பட்ஜெட்!
Published on
Updated on
1 min read

2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். மகளிரின் பயணதிற்கான செலவை குறைத்திடவும் அவர்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கவும் அரசு பேசிருந்திகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் “ விடியல் பயண திட்டம்” மூலம் இதுவரை 881 கோடி முறை மகளிர் பாதுகாப்பாக பயணம் செய்திருக்கின்றனர். இதன்முலம் மாதம் 888 ரூபாய் தொகையை மகளிர் சேமித்திருக்கின்றனர்.

மகளிர் கல்வியை போற்றி பாதுகாத்திட பள்ளி கேள்வியிலிருந்து உயர்கல்வியை தொடர்ந்திட அரசு செயல்படுத்திய திட்டம் தான் “புதுமை பெண் திட்டம்” ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

மகளிரின் தற்சார்பு வாழ்விற்கு வழி காண 1989 ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் “மகளிர் சுய உதவி குழுக்கள்” திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அவர் வழியில் நடைபோடும் இந்த அரசு அந்த திட்டம் தொடர்ந்து சிறப்படையும் வகையில் இந்த அரசு 6,23,529 சுய உதவி குழுக்கள் 1,41,818 கோடி ரூபாய் வாங்கி கடனாக பெற்று பயனடைந்துள்ளனர். சுய உதவி குழுக்கள் மகளிரின் உற்பத்தி பொருட்களின் விற்பனையை பெருக்கிட “வாழ்ந்து காட்டுவோம்” போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் கல்வி பயின்று வேலை வாய்ப்பிற்காக நகர்புறங்களுக்கு வரும் மகளிர் பாதுகாப்பை உறுதி படித்திடவும் அவர்களுக்கான தங்கு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் நவீன வசதிகளுடன் கூடிய 19 “தோழி விடுதிகள்” உருவாக்கப்பட்டுள்ளன. கைம்பெண்களின் கண்ணியமான வாழ்க்கையை மேம்படுத்த “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அமைக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை தவிர்த்திட மாநிலத்தில் 130 இடங்களில் அவசர கால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் அளிக்கப்பட்டு வருகின்றனர். பெண் ஓதுவார் நியமனம் செய்து ஆண்களுக்கு பெண்கள் நிகர் என்பதாகி மீண்டும் உறுதி செய்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com