மாற்றுத்திறனாளி தம்பதிக்கு........ இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம்....!

மாற்றுத்திறனாளி தம்பதிக்கு........ இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம்....!
Published on
Updated on
1 min read

மணமக்களில் யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் இலவச திருமணம் செய்து கொள்ளலாம் என கடந்த 2021- 22 ல் சட்டமன்றத்தின் அறிவிப்பு எண் 10-ன் படி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலை துறை சார்பாக இலவச திருமணம் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லஷ்மி காந்த பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.அதோடு மணமக்களுக்கு புத்தாடை சீர் வரிசையுடன் திருமணத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. 

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணமை ஊராட்சியை சேர்ந்தவர்  மணமகன் மதியழகன். இவருக்கு வாய் பேச இயலாது காது கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும், கொடநகரை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கும்  இந்து சமய அறநிலை துறை சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணமானது,  2021-22ல் சட்டமன்றத்தின் அறிவிப்பு10-ன் படி   செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் மற்றும் கோவில் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.  அதோடு,  தம்பதிகளுக்கு இலவசமாக புத்தாடை, சீர் வரிசை, திருமணசான்றிதழ் வழங்கப்பட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com