“விஜய் மோகம் வீழ்ந்துவிட்டதா.. கூட்டணி கட்சிகளால் மட்டும்தான் வெற்றியா?” - இடைத்தேர்தல் வெற்றி ரகசியம் உடைத்த தவெக MLA!

"எங்க தலைவர் நேரடியாகவே பாஜக கொள்கை எதிரின்னு சொல்லிட்டாரு. இதுக்கு மேல உங்களுக்கு என்ன.."
 TVK MLA Abishek
Published on: 
Updated on: 
1 min read

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த வெற்றி தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால்தான் தவெக வெற்றி பெற்றதாகவும், விஜய் மீதான இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகார்கள், EVM முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள், தபால் வாக்குகள் தொடர்பான விவாதங்கள் எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யோக பேட்டியில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், இந்த விமர்சனங்கள் அனைத்துக்கும் பதிலளித்துள்ளார். விஜய் மீதான ஆதரவு குறையவில்லை என்றும், பணப்பட்டுவாடா புகார்களில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், SIR மற்றும் நீட் விவகாரங்களில் தவெகவின் நிலைப்பாடு குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு பல விமர்சனங்கள் எதிர்க்கட்சி வைக்கப்பட்டது குறித்து “கூட்டணி கட்சிகள் ஆதரவால் தான் தவெக வெற்றி பெற்றிருக்கு” அப்படினு சொல்றாங்களே அது உண்மையா? 

கடந்த பொதுத் தேர்தலை விட இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் குறைவு. அதெல்லாம் உண்மை கிடையாது.. தவெகவின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

முழு நேர்காணலையும் காண இங்கே கிளிக் செய்யவும்

இந்த இடைத்தேர்தலில் தவெக பண பணப்பட்டுவாடா பண்ணாங்க, டிபன் பாக்ஸ் மூலம் பணம் விநியோகம் பண்றாங்க, புடவை கொடுத்தாங்க இந்த மாதிரி நிறைய விமர்சனங்கள் வந்தது அது உண்மையா என்ற நெறியாளரின் கேள்விக்கு.. 

எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல.. கொடுக்கவும் மாட்டோம். அது மாதிரி அஜெண்டா தவெக-விற்கு கிடையாது.

பாஜகவை தற்போது உள்ள தவெக ஆட்சி வலிமையா எதிர்க்கவில்லை என விமர்சனம் வருகிறது. SIR மற்றும் நீட் போன்ற விஷயங்களில் தவெக பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை ஏன்? என்று நெறியாளரின் கேள்விக்கு, எங்க தலைவர் நேரடியாகவே பாஜக கொள்கை எதிரின்னு சொல்லிட்டாரு. இதுக்கு மேல உங்களுக்கு என்ன நேரடியாக சொல்லணும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com