
தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மணிமண்டபம் பகுதியில் இருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வரை சுமார் 3 கிலோமீட்டர் ரோடு ஷோவில் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சரும் - திமுக தலைவருமான கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். மேலும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் - முதல்வர் மருந்தகம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
இரண்டாம் நாளான இன்று தஞ்சை திமுக மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தொடர்ந்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார், அவ்வாறு அவர் பேசும்போது
"காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவது திமுகதான். தஞ்சையையும், கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது; காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன்.
மாமன்னன் ராஜராஜன் ஆட்சி செய்த இந்த மண்ணில் சுவாசிக்கும் போதே கம்பீரமாக உணர்கிறேன். விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன். அந்தவகையில் 82.75 லட்சம் குறுவை தொகுப்பு திட்டம் இந்தாண்டு அறிவிக்கிறேன். 56000 விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்படுகிறது. 36 மாவட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்." என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது
ஆளுநர் ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை.
சந்திக்க நேரம் கொடுத்தால் மசோதா குறித்து கேட்பார்கள் என பயந்து உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நேரம் தராமல் இழுத்தடிக்கிறார். ஆளுநரால் கும்பகோணம் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழா தாமதமாகிறது" என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.