
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் “தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்கள் இந்த மண்ணின் வாழ்வுரிமைகளுக்காக களம் கண்டார்களே தவிர எந்த ரசிகையும், எந்த நடிகனும் களம் காணவில்லை.” என பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கான காரணத்தை அரிய நமக்கு ஒரு சின்ன ரிமைண்டர் தேவை..!
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த நிலையில் 2025 கல்வி ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் 600 மாணவ மாணவிகளுக்கு (மே 30) அன்று விருது வழங்கப்பட்டது.
விஜய்யை சந்திக்க வரும் மாணவர்கள் விஜயோடு குழு புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். மேலும் ஹார்ட்டின் சிம்பல் காட்டுவது, விஜய் படங்களில் வருவது போல போஸ் கொடுப்பது, கட்டி பிடிப்பது, டான்ஸ் ஆடுவது அன்பு மிகுதியால் முத்தம் கொடுப்பது என மாணவ மாணவிகள் விஜயின் மீதான தங்கள் அன்பை இவ்வாறு வெளிப்படுத்தி வந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
இந்த நிலையில்தான் விஜய்யின் இந்த மாணவர் சந்திப்பை மோசமாக விமர்சித்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரான வேல்முருகன். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது .."இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டாப் பயலுக.. நான் நடிகனை குறை சொல்ல மாட்டேன். ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறான்.
இன்னும் ஓரிரு மாதங்களில் பிளஸ் டூ முடித்து, டிகிரி முடிக்க இருக்கும் கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு.. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண்ணை, நாளை மாற்றான் வீட்டுக்கு மனைவியாக போகிற பெண்ணை.. அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி என மோசமாக விமர்சித்தார்.
ஆனால் இவர் விமர்சனத்திற்கு பதில் சொல்லும்விதமாக இரண்டாம் கட்ட கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி வேல்முருகனின் இந்த பேச்சுக்கு பதிலடி தந்திருப்பார்” இந்த மாணவி அவராக பேசினாரா இல்லை தவெக -வினர் சொல்லிக்கொடுத்தனரா? என்ற கிளவியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் தவாக தலைவர் வேல்முருகன் பேசுகையில் “இந்த உண்மையை உடைத்துப் பேசும்போது பல பேருக்கு ஆத்திரம் பொங்கி வருகிறது. பள்ளி மாணவர்களை வைத்து நமக்கு பதில் சொல்ல வைக்கிறார்கள் பாவம். நாங்கள் தற்குறியா..தற்குறி என்று எங்களை சொல்லக்கூடிய தற்குறிகளுக்கு நாங்கள் சொல்கிறோம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வரலாற்றை, வேல்முருகன் டி என்கிற பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே.
அதைப் பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் தற்குறிகளே. ஆனால் இன்னைக்கு தற்குறிகள் கேட்கிறார்கள் வேல்முருகன் யாரென்று. நீங்கள் எல்லாம் சினிமாவில் இருந்தபோது, தமிழர் விடுதலைக்காக களம் கண்டு தமிழ்நாட்டில் பணியாற்றிவன் இந்த வேல்முருகன். நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. வாங்கள் பார்ப்போம், விவாதிப்போம். மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களாம். யார் தற்குறி. சீட்டு எழுதி, மாணவர்களை கூப்பிட்டு, தேர்ந்தெடுத்து அதில் பேச வைக்கிறார்கள்.
எங்க அண்ணா.. உங்க நொண்ணா.. என்று கூறுகிறார். உங்கள் படத்தில் முழுக்க முழுக்க முஸ்லிம் என்றால் தீவிரவாதிகள், குண்டு வீசுபவர்கள், தேச விரோதிகள் என்று காண்பித்தீர்கள். ஆனால், இன்று அதே முஸ்லிமை மேடையில் கூப்பிட்டு வந்து நிறுத்தி கட்டிப் பிடிக்கிறீர்கள், அன்பைப் பரிமாறுகிறீர்கள். அவர்களிடம் மைக்கை கொடுத்து பேச வைக்கிறீர்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் கொடுத்த குளிர்பானங்களை வைத்துக் கொண்டு வேல்முருகன் நடிக்கவில்லை. எச்சரிக்கை செய்கிறோம். பொதுமக்கள் சொல்லட்டும் வேல்முருகன் பேசியது தவறு என்று பொதுமக்கள் தான் எனக்கு எஜமான். அவர்கள்தான் எனக்கு ஓட்டு போடுகிறார்கள். நீங்கள் யார். தனிமனித ஒழுக்கம் உள்ளவரா, வரி செலுத்துகிறீர்களா. டாடி மம்மி வீட்டில் இல்லை. தடை போட யாரும் இல்லை என்ற பாட்டை தமிழ் மக்கள் ஆதரிக்கிறீர்களா.
யாரோ ஒரு தொழிலதிபர் சால்வை போர்த்தி, பரிசு கொடுக்கிறார் என்றால் அவர் உங்கள் பிள்ளையை கட்டிப்பிடிக்க அனுமதிப்பீர்களா ஒரு பெண் வயது மூப்படைந்த பிறகு எந்த சினிமா காரர்களையும் கட்டிப் பிடிப்பதையோ, ஹார்ட்டின் விடுவதையோ அனுமதிக்க கூடாது. இதனை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு கட்சித் தலைவனாக அறிவுரை சொன்னேன்.
150 தமிழ் தேசிய அமைப்பு, பெரியாரிய அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துகிறேன். இவர்கள் எல்லாம் அறிவில்லாமல் என் தலைமையில் இயங்குகின்றனரா என்று காட்டமாக பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.