"தம்பி நீ நல்லா சாப்டுருக்க" அமைச்சரின் பேச்சால் கடுப்பான பயணி! இளைஞரை அவமானப்படுத்தினாரா 'தவெக அமைச்சர்?' எதிர்வினையாற்றிய 'அதிமுக IT Wing'

த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார்.
Tamilan Parthiban
Tamilan ParthibanTamilan Parthiban
Published on
Updated on
1 min read

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வினை மேற்கொண்ட போக்குவரத்துக்கு துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனுடன் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்.

கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பக்ரீத் மற்றும் முகுர்த்த தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். அங்கிருந்த அதிகாரிகளிடம், பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து, அங்கு நடைமேடையில் நின்றுகொண்டிருந்த மக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தென் மாவட்டங்களுக்கு போதிய பெருந்துவசதிகள் இல்லை என்று அங்கிருந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த பயணி ஒருவர், இது குறித்து அமைச்சரிடம் பேசினார்.

அப்போது தமிழன் பார்த்திபன் "தம்பி நீ நல்ல சாப்டுருக்க..ஆனா நான் இன்னும் சாபுடல" என்கிற வார்த்தையை திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தார். அந்த பயணி பேருந்து குறித்து கேள்வி எழுப்பும் பொது எல்லாம் இத வார்த்தையை அவரை நோக்கி கேட்டுக்கொண்டே இருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அந்த பயணி, "நீ நல்ல சாப்டுருக்க என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார். நான் நல்லா சம்பிட்டுதான் வருவேன் அது என் விருப்பம்" என்று கோபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இதனையடுத்து இது குறித்து, அதிமுக IT Wingகின் X தளப்பக்கத்தில் "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு. ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார். இல்ல புரியல…. “நீ நல்லா சாப்பிட்டிருக்க” ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது? GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கீங்க… இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள்" என்ற பதிவினை பதிவிட்டிருந்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com