
சேலம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் இவர் வங்கியில் கடன் பெற்று சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வந்துள்ளார். தனது அக்காவின் மகன் திருமணத்திற்காக வண்டியை வேறு டிரைவரிடம் கொடுத்து வீடு லோடு எடுக்க சொல்லிவிட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
அதுபோல லோடு எடுத்து வந்த போது மேற்கு வங்கம் மாநிலம் துர்கா பூரில் லாரி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் டிரைவருக்கு பலத்த காயங்களும் லாரிக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த நடராஜன் மேற்கு வங்கத்திற்கு விரைந்து டிரைவருக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு லாரி நிற்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் லாரியில் இருக்கும் சரக்கை வேறு லாரிக்கு மாற்றிவிட எண்ணி, வாகனத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு சரக்கு வாகனம் நடராஜன் லாரியின் பின்புறத்தில் மோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் அதிர்ஷ்டவசமாக நடராஜன் உயிர் தப்பிய நிலையில் லாரிக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மொழி தெரியாத ஊரில் கையில் பணம் இல்லாமல் செய்வது அறியாது தவித்த நடராஜன் தன்னை பற்றியும் தனது லாரி இப்போது இருக்கும் நிலையை பற்றியும் கண்ணீர் மல்க பேசி “E Vahan seva” என்ற வாட்ஸ் ஆப் குழுவில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்து நடராஜுக்கு உதவ முன்வந்த E Vahan seva குழுவின் தலைவர், இந்த குழுவில் இருக்கும் நபர்கள் ஒருவருக்கு 234 ரூபாய் என அனுப்பினால் அவரையும் அவரது லாரியையும் சுலபமாக மீட்டு பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும் என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை அடுத்து அந்த குழுவில் இருந்த லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் அடுத்தடுத்து 234 ரூபாய் அனுப்ப தொடங்கியுள்ளனர். எனவே 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 12 ஆயிரம் பணம் கிடைத்துள்ளது, பின்னர் மீண்டும் குழுவில் பதிவிட்ட தலைவர் கணேஷ்.
“இதுவரை பணம் அனுப்பியவர்களுக்கு நன்றி நடராஜனையும் அவரது வாகனத்தையும் மீட்க தேவையான பணம் கிடைத்து விட்டது இதற்கு மேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம். என்று பதிவிட்டுள்ளார்” பணம் அனுப்பியவர்களின் வீடியோவையும் குழுவில் பகிர்ந்துள்ளார்.
தேவையான பணத்தை சேகரித்ததை தொடர்ந்து நாகராஜனின் லாரியை மீட்க நடவடிக்கை எடுத்த கணேஷ் மற்றும் குழுவினர், லாரியை மீட்டு கிரேன் உதவியுடன் மற்றொரு வாகனத்தில் சிவகிரிக்கு கொண்டுவந்தனர். மேலும் லாரியை சரி செய்யவும் நாகராஜுக்கு உதவி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்