“கடவுள் காத்திருக்க வேண்டாம்!” - திருப்பரங்குன்றம் கோவில் தரிசன வழக்கில் அமைச்சர் நிர்மல் குமாருக்கு உயர்நீதிமன்றம் கருத்து

“கோயிலில் அமைச்சர் தரிசனம் செய்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்க விரும்பவில்லை"
minister nirmal kumar
Published on
Updated on
1 min read

மே 4 வெளியான சட்டமன்ற தேர்தலில் பெரும்பாண்மையான இடங்களை கைப்பற்றிய முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மே 10 தேதி அக்கட்சியின் தலைவர் ஜோசேப் விஜய் தமிழக முதலைவராக பொறுப்பேற்றார். மேலும் மே 13-ல் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அதையடுத்து தவெக அமைச்சர் நிர்மல் குமார், மே 15ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் தரிசனம் செய்தார். விதிகளின்படி, கோயிலில் மதியம் 12.30 மணிக்கு உச்சி கால பூஜை தொடங்கி நடைபெற்று நடையானது 12.45 மணிக்கு அடைக்கப்படும். விழா காலங்கள் தவிர மற்ற நாட்களில், இந்த நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், அமைச்சர் நிர்மல் குமார் சுமார் 1 மணியளவில் கோயிலுக்கு வருகை புரிவார் என, அவருக்காக கோவில் நடை அடைக்கப்படாமல் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த அவரை தவெக தொண்டர்கள் வரவேற்ற நிலையில், பெரிய நடை வழியாக உள்ளே சென்ற அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் கருவறையில் தரிசனம் செய்த பிறகு மீண்டும் பெரிய நடை வழியாகவே வெளியே  வந்துள்ளார். பொதுவாக இந்த நடை அடைக்கப்பட்டு, கருவறை தரிசனம் செய்தவர்கள் மடப்பள்ளி மண்டபம், சஷ்டி மண்டபம் வழியாக வெளியே செல்வார்கள். அமைச்சர் கருவறையில் சாமி தரிசனம் செய்தது, பெரிய நடை வழியாகவே வெளியே வந்தது உள்ளிட்ட வீடியோக்கள் இணையங்களில் பரவி வைரலான நிலையில் பக்தர்கள் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தரிசன முறையை எதிர்த்த வழக்குகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்று நடந்த விசாரணையில் “எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்” என்றும் “கோயிலில் அமைச்சர் தரிசனம் செய்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்க விரும்பவில்லை" என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com