
மனைவிக்கு அதிக சொத்துக்களும், வருமானமும் இருக்கும் பட்சத்தில் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னைையை சேர்ந்த டாக்டர் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்பநல நீதிமன்றம் டாக்டர் தனது மனைவி மற்றும் மகனுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அப்போது மகன் நீட் தேர்வுக்காக படித்து கொண்டிப்பதால் அவரது படிப்புக்கான செலவுக்காக ரூ.2.77 லட்சத்தை ஜீவனாம்சமாக தருவதற்கு மனுதாரர் ஒப்புதல் அளித்தார்.
அதே நேரத்தில், மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்துக்களும், வருமானமும் உள்ளது. அவர் ஒரு ஸ்கேன் சென்டரை நடத்தி வருகிறார் என்று மனுதாரர் தரப்பில் வாதிட்டு அது தொடர்பான சான்றுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதி, மனைவிக்கு அதிக சொத்துக்களும், வருமானமும் இருக்கும் பட்சத்தில் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை எனக்கூறி ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட குடும்பலநல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் மகனுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட குடும்ப நல நீதிமன்ற உத்தரவில் இந்த நீதிமன்றம் தலையிடவில்லை என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.