

நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் என்டிஏ- அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பாக மதுரை மத்திய தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் சுந்தர் சி. மற்றும் அக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி, இன்று மதுரைக்குச் சென்று தேர்தல் பணியை மேற்கொள்ள உள்ளார். இளைஞர்களின் வாக்கு 50 சதவீதம் விஜய்க்கு செல்லும் ஆனால் அவர் முதன் முதலாக தேர்வு எழுதுவது போல் தேர்தலை சந்திக்கிறார் எவ்வளவு மார்க் வாங்குகிறார் என்பதை பொறுத்துதான் அவருடைய வெற்றி தோல்வியை பார்க்க முடியும்.
சுந்தர் சி யை தேர்வு செய்வதற்கான காறணம் குறித்து கேட்ட போது "அவர் எனது 30 ஆண்டு கால நண்பர் மத்திய தொகுதிக்கு ஒரு அற்புதமான வேட்பாளராக குடும்பம் குடும்பமாக அவருடைய படத்தை எப்படி பார்ப்பார்களோ அது போன்று குடும்பம் குடும்பமாக வந்து வாக்களிப்பார்கள்" என்றார் ஏ. சி. சண்முகம். விஜய்க்கு எப்படி ஒரு கூட்டம் இருக்கிறதோ அதேபோன்று சுந்தர்.சி க்கும் ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது அதனால் நாங்கள் வேட்பாளராக அவரை நிறுத்த திட்டமிட்டு அவரை சந்தித்தோம் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார் அதன் அடிப்படையில் போட்டியாளராக நிறுத்தப்பட்டுள்ளார்" என்றும் தெரிவித்தார் ஏ. சி. சண்முகம்.
அவரை தொடர்ந்து பேசிய சுந்தர் சி "எனது அண்ணன் சண்முகம் என்னை நம்பி வாய்ப்பளித்துள்ளார். மதுரை மத்திய தொகுதி மக்கள் எனக்கு வெற்றி கனியை தருவார்கள், எனது வாழ்க்கையில் மாதத்தில் 15 நாள் இனி மதுரையில் தான் இருக்கும் அதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்பட துறையில் 30 வருட காலமாக அதிகப்படியான வெற்றிகளையும் கொடுத்துள்ளேன்" என்றும் எனது தேர்தல் வெற்றியை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் நிச்சயமாக மதுரையில் வெற்றி பெறுவோம் திமுகவிற்கு எதிர்ப்பு என்ற ஆலயம் உள்ளது எந்த முறையிலும் வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது" என்றும் தெரிவித்தார்.
தவெக கூட்டத்தில் பாட்டில் வீசியதை குறித்து அவரிடம் கேட்டபோது "அது ஒரு அசிங்கமான விஷயம் இப்படி வன்முறையாக அரசியல் இருக்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது என்னை போன்ற பொது ஜனங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற காரணமே இது போன்ற சம்பவங்கள் தான். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நாடு எங்கு செல்லும்" என்றும் பேசியிருந்தார். தொடர்ந்து விஜய் குறித்து பேசிய சுந்தர் சி "விஜய் என் மீது அன்பும் மதிப்பும் கொண்டவர் நானும் அப்படித்தான் எனது மனைவியும் அவரை தம்பியாக கருதுகிறார். அவர் அக்கா என்று தான் அன்பாக கூறுவார், அவரை நான் விமர்சிக்கவோ அவர் கட்சியை பற்றி விமர்சிக்கவும் அவர் வேட்பாளரை பற்றி கருத்து கூறவும் நான் தயாராக இல்லை" என்றும் குறிப்பிட்டுட்டிருந்தார். நான்கு முனை போட்டி குறித்த செய்தியளரின் கேள்விக்கு "மதுரை மத்திய தொகுதியை பொருத்தவரையில் போட்டி இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் தான்" என்றும் உறுதிபட குறிப்பிட்டார்.
அதையடுத்து புதிய நீதி கட்சியின் இரண்டாவது தொகுதியை இன்று மாலை பாஜக வெளியிடும் என்றும் பாஜக ஒதுக்கும் தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிட உள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.