நயனை சயனம் பண்ணியதை எல்லாம் நாங்கள் வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
சென்னை ராயபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு , கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராயம் சாதாரணமாகிவிட்டது. காவல்துறை நடவடிக்கை எடுத்தால், அவர்கள் அடி உதை வாங்கும் நிலை உள்ளது. சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறும் ஸ்டாலின் போதைப்பொருள் எதையுமே ஒழிக்கவில்லலை. தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிவிட்டது என தெரிவித்தார்.
அண்ணா நகர் டவர் பூங்காவில் நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணனிடம் திமுகவினர் தரக்குறைவாக நடந்து கொண்டு, மாமூல் கேட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரியிடம் மாமூல் கேட்ட ஒரே கட்சி திமுகதான் என தெரிவித்தார்.
2021 ல் வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தனர், இல்லையேல் நிரந்தரமாக வனவாசம் சென்றிருக்கும் திமுக என்று விமர்சித்த ஜெயக்குமார், எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா அடுத்து எடப்பாடி பழனிசாமி என்று எங்கள் கட்சி இருக்கின்றது. ஆனால் ஸ்டாலின் இல்லை என்றால் அந்த கட்சியே எங்கு இருக்கும் என்று தெரியாமல் போய்விடும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எங்களை குப்பை என்கின்றனர். குப்பை உரமாகும். ஆனால் திமுக எனும் கறையான், எல்லாவற்றையும் அரித்து நாசமாக்கிவிடும். கறையான்கள் களையெடுக்கப்படும் காலம் வந்துவிட்டது என தெரிவித்தார்.
ஜெயலலிதா பற்றி தவறாக விமர்சிக்கின்றனர். அவருடை தாத்தா, அப்பா மற்றும் அவருடைய காம லீலைகளை நாங்கள் எழுத ஆரம்பத்தால் 4 வண்டியில் அவற்றை எடுத்து செல்ல வேண்டியிருக்கும் என விமர்சித்த அவர், உதயநிதி உத்தம புருசன் மாதிரி பேசுகிறார். அரசியல் ரீதியாக மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும். மீறி தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவை விமர்சித்தால் அவர்களை பற்றி சோசியல் மீடியாவில் போட்டு நாங்கள் நாறடித்துவிடுவோம். நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு விமர்சனம் செய்தால் நாங்கள் ஆயிரம் விமர்சனம் செய்வோம். நயனை சயனம் பண்ணியதை எல்லாம் நாங்கள் வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள், தமிழக மக்கள் நீட்டை விரும்பவில்லை என கடந்ந 2 ஆண்டாக நீட் குறித்த எங்களது நிலைப்பாட்டை கூறி வருகிறோம் , எனவே மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி எங்களது நிலைப்பாட்டை கூற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று கூறினார்.
இதையும் படிக்க:அணைகளை மூடிய கர்நாடகம்; அன்புமணி இராமதாஸ் கண்டனம்!