

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் ‘குடி அரசு’ இதழ் தொகுப்பு வெளியீட்டு விழாவில், முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ‘குடி அரசு’ இதழ் தொகுப்பை ஸ்டாலின் வெளியிட பெரியாரியல் ஆய்வறிஞர் எஸ்.வி.ராஜதுரை பெற்றுக் கொண்டார்.
அந்த விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட் என்றும், அவரது ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது என்றும் காட்டமாக விமர்சித்திருந்தார். மேலும் திருப்பரங்குன்றம், செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரம் குறித்தும் அரசின் நிலைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் அவர் பேசியதாவது.. “தண்ணீர் வரவில்லை என்று கூறியதற்கு கூட என்னை கைது செய்தார்கள்.. நாங்கள் வாயையே திறக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய டெல்லி எஜமானர்கள், குறிப்பாக நயினார் நாகேந்திரன், எவ்வளவு மோசமாகப் பேசினாலும் CM வாயைத் திறப்பதில்லை. அந்த அளவுக்கு பயம் இருக்கிறது. “குத்தினது பாஜகவா இருந்தால் கத்தக்கூடாது என்பதுதான் டெல்லி உத்தரவா?” என்றும் சாட்டியிருந்தார். இந்த ஆட்சியில் ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை. ஆளுங்கட்சி MLA ஒருவர் இரவு நேரத்தில் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. அது சாதாரணம் மெசேஜ் இல்லை.. தலைவன் எந்த வழியோ தொண்டன் அந்த வழி. இதுக்கும் ஒரு கேஸ் போட்டாலும் போடுவாங்க.. இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினோம். ஆனால் அப்படியொரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று ஆளுங்கட்சியினர் மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டு இருப்பதைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மை; அந்தப் பெண் மாவட்ட ஆட்சியரின் கணவரும் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். அவர் புகார் அளித்தும் இதுவரை அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கேட்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அதேபோல், புகார் அளிக்க வந்தவரை துணை சபாநாயகர் தாக்கிய சம்பவமும் நடந்திருக்கிறது. இப்படி தான் சட்டம் ஒழுங்கு எல்லா இடங்களிலும் சீர்குலைந்திருக்கிறது.
மேலும் செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் நடத்த யாகம் குறித்து பேசிய அவர், இது தான் பெரியாரின் கொள்கையா என கேள்வி எழுப்பினர். மேலும் முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட் என்றும் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் ”திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நமது ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த நமது தலைவர், யாருக்கும் அஞ்சாமல், நீதிமன்றத்தில் ‘We will face the consequences’ என்று தெரிவித்தார்.” அப்படிச் சொன்னதோடு மட்டுமல்லாமல், மத நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் பாதுகாத்தோம். அன்று நமது தலைவரும் திராவிட மாடல் அரசும் உறுதியாக இருந்ததால், கலவரத்தை ஏற்படுத்த நினைத்த சங்கி கூட்டத்தின் திட்டத்தை முறியடித்தோம். ஆனால் இன்றைய சோப்ளாங்கி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதிடாமல் கோட்டைவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும் முதலமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என்று நமது தலைவர் வலியுறுத்தி 2 நாட்களாகிவிட்டன. ஆனால் முதலமைச்சர் இதுவரை வாயைத்திறக்கவில்லை.
எனவே, இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மற்ற அனைவரையும் விட நமக்கு அதிகமாக இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதனை மனதில் வைத்து நமது பணிகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.