“ஒரு பிரச்சனை-னு வந்தால் 72 நாள் ஆள காணோம்” - விஜய்யை விளாசிய ஈபிஎஸ்!

மக்களையும் கட்சியையும் காப்பதுதான் தலைவருடைய கடமை” என்றும் எம்ஜிஆர் -யும் இவரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள்”
EPS vs vijay
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் ஏப்ரல் 23 நடக்கவிருக்கும்  சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தொடர்ந்து பெரும் பரபரப்பையம் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அரசியல் கட்சியின் தலைவர்களும் வேட்பாளர்களும் மற்ற கட்சியினரை தொடர்ந்து விமர்சித்து வருவதும் அதற்கு பதிலடி தருவதாக அவர்களும், மீண்டும் வார்த்தை போரை வளர்த்து வருவதாக இருக்கிறது. இதில் அதிமுக, திமுக மற்றும் தவெக தலைமை என எல்லோரும் சிக்கி வருகின்றனர். சமீபமாக ஈபிஎஸ் அவர்கள் திமுக வேட்பாளரும் துணை முதல்வருமான உதயநிதி அவர்களை குறித்து அவர்மீதான சர்ச்சையை மேல்கோடிட்டு  கடுமையாக விமர்சித்திருந்தார். அவரும் பதிலுக்கு விமர்சித்திருந்தார், இது கூட்டணி கட்சியினர் இடையேயும், தொண்டர்களிடையேயும் பெரும் எதிர்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கிடையில் ஈபிஎஸ் எடப்பாடியில் மனு தாக்கல் செய்த அன்று செய்தியாளர்கள், தவெக தலைவர் விஜயின் “2 முனை போட்டி தான் ஒன்று DMK இன்னொன்னு TVK” எனும் கூற்று குறித்து கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி  “ இது அவரின் அரசியல் அறியாமை என்று பதிலளித்ததார். இது தவெக தொண்டர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் விஜய் குறித்து பேசியுள்ளார் ஈபிஎஸ்.
திருவள்ளூர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் “கனவு காண்கிறோம், கண் விழித்தால் கனவு காணாமல் போயிடும், அதுபோல்தான் திரையுலகம். அதை நம்பி ஓட்டுப் போட்டால் அந்த ஓட்டுதான் வீணாகும். ஒரு ஆள் 50 பேரை அடிப்பார், நிஜத்தில் முடியுமா? துப்பாக்கியால் சுடுவார்கள், இவர் மீது குண்டே பாயாது, ஆனால் இவர் சுடும் குண்டு எல்லோருக்கும் பாயும். அதை நம்பாதீர்கள்” என்று திரைத்துறையில் இருந்து அரசியலில் களமிறங்கிய விஜய் குறித்து விமர்சித்துள்ளார். இதற்க்கு தொண்டர்கள் அனைவரும் கைதட்டி சிரித்துள்ளனர்.

அதை தொடர்ந்து பேசிய ஈபிஎஸ் , இளைஞர்களை நோக்கி “நீங்கள் நாட்டை ஆளக்கூடிய சிங்கக் குட்டிகள், இளைஞரின் சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சி பற்றி இருக்க வேண்டும்.  நாங்கள் வாழ்ந்து முடித்தவர்கள், நீங்கள் வாழப் போகிறார்கள். ஒவ்வொரு இளைஞனும் சிந்திக்க வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு, தமிழகம் வளம் கொழிக்கும் நாடாக மாற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

பின் மீண்டும் விஜய் குறித்து “ஒரு பிரச்சனை வந்தது, 72 நாட்கள் ஆளைக் காணோம். நானெல்லாம் போராட்டம் செய்து 7 முறை சிறை சென்றேன். 51 ஆண்டு கால அரசியலில் 10 தேர்தல்களை சந்தித்தேன், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்தேன், கட்சிக்காக உழைக்கிறேன், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் துணிச்சலோடு நின்று மக்களையும் கட்சியையும் காப்பதுதான் தலைவருடைய கடமை” என்றும் எம்ஜிஆர் -யும் இவரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள்” எனவும் கேட்டு கொண்டார்

மேலும் திருவள்ளூரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர்,மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின்  அம்பத்தூர்,பூந்தமல்லி, ஆவடி தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.ஒரே மேடையில் 10 தொகுதிகளின் வேட்பாளர்களை நிற்க வைத்து அறிமுகம் செய்து வைத்து பரப்புரை ஆற்றினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com