பழனியில்.. விஜய் ஸ்டைலில் யூனிபார்ம் போட்டு வந்த தவெக தொண்டர்கள்.. வியந்து பார்த்த மக்கள்

இதைப் பார்த்த அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்...
palani.
palani.Admin
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று காலை முதல் மாநிலம் முழுவதும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல், இயந்திரக் கோளாறு எனப் செய்திகள் வந்தாலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் நடந்த ஒரு சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள், தங்கள் தலைவன் மீதான பற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு வித்தியாசமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். இது அந்தப் பகுதியில் உள்ள மற்ற கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பழனி தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு இன்று காலை வந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும், ஒரே மாதிரியான உடையில் வருகை தந்தனர். விஜய் தனது கட்சி மாநாட்டிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அணிவது போன்ற வெள்ளை நிறச் சட்டை மற்றும் காக்கி நிற பேன்ட் அணிந்து அவர்கள் ஒரு ராணுவப் படை போல வந்து இறங்கினர். தவெக தலைவர் விஜய் இந்தத் தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார் என்கிற நம்பிக்கையில், அவரது பாணியிலேயே சீருடை அணிந்து வந்து தங்களது ஜனநாயகக் கடமையை அவர்கள் ஆற்றினர். இதைப் பார்த்த அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.

இந்தச் சீருடை அணிந்த இளைஞர்களைப் பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள் பலரும் அவர்களுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். குறிப்பாக முதல்முறை வாக்களிக்க வந்த இளம் வாக்காளர்கள், தவெக தொண்டர்களின் இந்த 'யூனிபார்ம்' ஸ்டைலைப் பார்த்து வியந்து போயினர். பழனி தொகுதியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பலமான போட்டி நிலவி வரும் சூழலில், தவெக தொண்டர்களின் இந்த அதிரடி என்ட்ரி கவனிக்க வைத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com