தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை த்ரிஷா, இன்று சென்னையில் உள்ள தனது வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர்நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு நடிகை த்ரிஷா இன்று காலை வருகை தந்தார். வரிசையில் நின்றிருந்த மற்ற வாக்காளர்களைப் போலவே அவரும் அமைதியாகக் காத்திருந்து தனது முறை வந்ததும், வாக்குச்சாவடிக்குள் சென்ற த்ரிஷா, தேர்தல் அதிகாரிகளிடம் தனது அடையாள அட்டையைக் காட்டிவிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) தனது விருப்பமான வேட்பாளருக்கு வாக்கைச் செலுத்தினார். அதன் பிறகு வெளியே வந்த அவர், தனது இடது கை விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை அங்கிருந்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் உயர்த்திப் பிடித்தபடி புன்னகையுடன் போஸ் கொடுத்தார். த்ரிஷா ஓட்டுப் போட்டுவிட்டு வரும் இந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
த்ரிஷாவின் வருகையை அறிந்த ரசிகர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே அதிக அளவில் திரண்டதால், அந்தப் பகுதியில் ஒரு சிறிய நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கூட்டத்தைச் சீர் செய்து, த்ரிஷா பாதுகாப்பாகக் காரில் ஏறிச் செல்வதை உறுதி செய்தனர். த்ரிஷா கிளம்பும் போது, ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்