
இந்த காலகட்டத்தில் இணையத்தில் எது எப்போது வைரலாகும் என்றே சொல்ல முடியாது. சில வருடங்களுக்கு முன்பு திடீரென காண்ட்ராக்டர் நேசமணி டிரண்ட் ஆகி ஏகபோகமாக ஓடிகொண்டி கொண்டிருந்தார் அந்த வரிசையில் திடீரென கூமாப்பட்டி இணைந்துள்ளது..
‘கூமாப்பட்டி’. dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில், ‘கூமாப்பட்டி ஊருக்கு வாருங்க’ என்று அந்த ஊரின் பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் தங்கபாண்டி இளைஞர்.அந்த வீடியோவில், “ஏங்ககக.. என அவர் அழைப்பதும்.. மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கடன் பிரச்சனையா கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனித் தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்...” என்று அந்த இளைஞர் தனக்கான பணியில் பேசுவதும் பலரையும் கவர்ந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இங்குள்ள பசுமை நிறைந்த சுற்றுலா தளத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனிடையே விருதுநகர் ஆட்சியராக இருந்த ஜெயசீலன் இன்று கூமாப்பட்டிக்கு சென்று அங்கிருந்த கண்மாய் பகுதியில் நின்றபடி செல்பி புகைப்படம் எடுத்து அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம்; மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அர்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன.
டிரெண்டில் இணைந்த கலெக்டர்
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனும் இந்த டிரெண்டில் சேர்ந்து விட்டார். மேலும் கூமாபட்டி குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...
நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..”
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்! என பதிவிட்டுள்ளார்.
தம்பி வராதீங்க..!
இந்த ரீல்ஸை பார்த்து பலரும் கூமாபட்டிக்கு படையெடுத்துள்ளனர், ஆனால் கூமாபட்டிக்கு வர வேண்டாம் எனவும், ரீல்ஸ்களில் காணப்படும் பசுமை வாய்ந்த பகுதிகள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை. இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது யாரும் இங்கு யாரும் வரவேண்டாம் என அதிகாரிகள் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.