
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.
அரசியல் களத்தில் தனது இரண்டாவது பயணத்தை நாகப்பட்டினத்தில் தொடங்கிய நடிகர் விஜய், அங்கே திரண்டிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னால், ஆளும் அரசுக்கு எதிராகக் கடும் சீற்றத்துடன் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் பயணத்திற்கு அரசு தரப்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய விஜய், முதலமைச்சரை நேரடியாகக் குறிப்பிட்டு, "மிரட்டிப் பார்க்கிறீங்களா?" என்று கேள்வி எழுப்பியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் பரப்புரையை முடித்துக்கொண்டு, திருவாரூர் வந்தடைந்த விஜய் -க்கு கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. விஜய் பரப்புரை வாகனத்தின் மேல் வந்து அந்த மாலையை ஏற்றுக்கொண்டார்.
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த விஜய் 6.15 மணியளவில் மக்கள் மத்தியில் பேச துவங்கினார், “எல்லாரும் எப்படி இருக்கீங்க… ? safe ஆஹ் இருக்கிறீங்களா? என கேட்ட விஜய் “திருவாரூர் னாலே , தியாகராஜர் கோவில் அழித்தேர் தான் மனசுக்கு வரும், ரொம்ப நாளா ஓடாம இருந்த இந்த திருவாரூர் தேரை ஓட்டுனது நான்தான் னு மாறத்தட்டி சொன்னவரு யாருன்னு உங்களுக்கு நல்லா தெரியும்., ஆனா அவரோட பையன் நம்ம முதல்வர் நல்லா ஓடிக்கிட்டு இருந்த தமிழ்நாடுங்கிற இந்த தேர நாலா பக்கமும் கட்டைய போட்டு அசையவிடாம பண்ணிட்டாரு.
திருவாரூர் தான் சொந்த மண்ணுனு சொல்றீங்க, ஆனா அந்த திருவாரூர் கருவாடா காயுது, நாகப்பட்டினம் போலவே, அதிக குடிசைகள் கொண்ட ஊரும் திருவாரூர் தான். நண்பா இங்க இருக்க யூனிவெர்சிட்டியில எல்லா டிபார்ட்மென்ட் -ம் இருக்கு, இருக்காதே.. இங்க இருக்க மெடிக்கல் காலேஜுக்கே வைத்தியம் பாக்குற அளவுக்கு தான் இருக்கு. திருவாரூர் ஒரு மாவட்டத்தோட தலைநகர், ஆனா நெடுஞ்சாலையில இருந்து நேரடியா ஒரு பஸ் இருக்காதே.
இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்கார், அவர் வேலையே சி.எம் குடும்பத்துக்கு செய்யறதுதான். உங்களுடன் ஸ்டாலின்.. உங்களுடன் ஸ்டாலின்… அப்டினு உங்க குடும்பத்துக்கு மட்டும் தான் சொல்லிக்கணும், மக்களுக்கு சொல்லவே முடியாது. இங்க இருக்க டெல்டா விவசாயிகள் ஒரு கொடுமையை அனுபவிச்சிட்ருக்காங்க, இங்க உள்ள கொள்முதல் மையங்கள்லநெல்ல ஏத்தி இறக்க 40 கிலோ மூட்டைக்கு, 40 ரூபா கமிஷன் வாங்குறாங்க. ஒரு டன்னுக்கு 1000 ரூபாய் கமிஷன் வாங்கிருக்காங்க. 4 வருஷத்துல இந்த டெல்டா விவசாயிகளிடமிருந்து பல கோடிகளை கமிஷனா புடிங்கிருக்காங்க.
இத வேற யாரும் சொல்லியிருந்தா நான் நம்பியிருக்க மாட்டேன், என்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான், விவசாயிங்க பொய் சொல்ல மாட்டங்க, சி.எம் சார் இது உங்க ஆட்சியில் நடந்துருக்கு , உங்களுக்கு வேணா 40/40 - னா அது தேர்தல் ரிசல்ட் -ஆஹ் இருக்கலாம், ஆனா திருவாரூர் மக்களுக்கு 40/40 -னா நீங்க அவங்க வயித்துல அடிச்சு வாங்குன அந்த கமிஷன். இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க..?
சொன்னதையே திருப்பி சொல்றான், என்னடா இவன்னு நினைக்காதீங்க, தீர்வை நோக்கி போறதுதான் tvk லட்சியமே.
கல்வி,ரேஷன், மருத்துவம், மின்சாரம், குடிநீர், பெண்கள் பாதுகாப்புனு அடிப்படையான விஷயங்கள்ல No Compromise. இதைத்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்வோம். நாங்க என்ன சொல்றோமோ அதைத்தான் செய்வோம்.பொய்யான வாக்குறுதியை நாங்க கொடுக்கவே மாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ அதைத்தான் சொல்வோம்,
ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்,ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான ஜனநாயாக ஆட்சி இது அமையத்தான் உழைகிறோம்.
நண்பா ஒரே ஒரு டவுட், இது சும்மா கூடுற கூட்டம் ஓட்டுப்போட மாட்டாங்க -னு சொல்றாங்க, அப்டியா? சும்மா கூடுற கூட்டமா? என அவர் கேட்டதும் மக்கள் கூட்டம் ‘இல்லை, இல்லை’ என ஆர்ப்பரித்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.