
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க இங்கு அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் தற்போது வரை மும்முனை போட்டிதான் நிலவுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி அதிமுக மாற்றம் அதன் கூட்டணி மற்றும் தவெக. ஆனால் இத்துணை போட்டிகள் இருந்தாலும் அரசியல் களம் திமுக -விற்கு சாதகமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதிமுக -பாஜக கூட்டணி
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக திடீரென பாஜக -வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமித்ஷா நேரில் வந்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். ஆனால் திமுக -வை வீழ்த்த இது போதாது என எடப்பாடிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அதிமுக நிர்வாகிகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை “தம்பி விஜய் வர வேண்டும்” என தாம்பூலம் வைத்து அழைக்கின்றனர்.
அதிமுக -வில் மற்றுமொரு பிரச்னை என்னவென்றால் பாமக.. பாமக அதிமுக கூட்டணியில் இருப்பது உறுதியாகி இருந்தாலும், ராமதாஸ் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரத்தில் பிரேமலதாவும் எடப்பாடி மீது கோவத்தில்தான் உள்ளார். ஆகையால் தான் அதிமுக -வின் கூட்டணி வியூகம் குறித்து தற்போது வரை எந்த நிலைத்தன்மையும் இல்லை.
தனித்து நிற்கும் தவெக
தற்போது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார். அவர் துவங்கிய தமிழக வெற்றி கழகமும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. ஏற்கனவே விஜய் தமிஸ்க்கத்தின் முக்கிய நட்சத்திரம் என்பதால் அவருக்கு இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.அதை நம்மால் காலத்திலும் பார்க்க முடிகிறது. மேலும் தற்போதைய சில கருத்து கணிப்புகள் 25% வாக்கு வங்கியை விஜய் என பெறுவார் சொல்லப்படுகிறது. ஆனால் கள நிலவரம் வேறாக உள்ளது.
விஜய் -ன் அரசியல் பிரவேசம் நிச்சயம் திமுக எதிர்ப்பு வாக்குகளை உடைக்க வல்லது. எனவே மேற்சொன்ன கணிப்பு படி 25% வாக்குக்களை பெறுவது சாத்தியமற்ற நிலை. மேலும் விஜய் -இன்னும் முழுநீள அரசியல்வாதியாக மாறவில்லை என்பதும் பலரின் கருத்தாக இருக்கக்கூடிய சூழலில் தவெக -இன்னும் உழைக்க வேண்டும்.
கூட்டணி கட்சிகள் வராததன் காரணம் விஜய் இன்னமும் வெற்றி வாய்ப்பிற்கு செல்லவில்லை. மேலும் அவரும் பகிரங்கமாக எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. தனித்து வெல்வோம் என சொல்வதால், கூட்டணிக்கட்சிகளும் அவரை தனித்து விட்டிருக்கின்றன.
திருமா பேசியது என்ன!
“பாஜக -வின் செயத்திட்டத்தை நிறைவேற்றுவதே தவெக -வின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது’ என விசிக தலைவரை திருமாவளவன் பேசியுள்ளார். சில இதை அவரது ராசியில் வியூகம் என்கின்றனர், சிலர் அவர் திமுக கூட்டணியில் இருப்பதாலே இவ்வாறு பேசுகிறார் என்கின்றனர். வேறு சிலர் வெறும் திமுக -எதிர்ப்பில் மட்டுமே தான் விஜய் இருக்கிறார், மற்றபடி அவரின் உள்ளார்ந்த நோக்கம் என்ன என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இவை அனைத்திற்கு பதில் தேர்தல் சாமியத்தில்தான் தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.