
இன்னும் 10 மாதங்களில் தமிழ்நாடு வரலாறு காணாது முக்கிய மான சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. கூட்டணி அமைத்தல் கொடி பிடித்தல், கொள்கையை நிறுவுதல் என அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் நடிகர் விஜய் -யும் தமிழக வெற்றி கழகத்தை துவங்கி உள்ளார். இதனால் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
திமுக -வில் விசிக, கம்யூனிஸ்ட் பார்ட்டி, மதிமுக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, என சித்தாந்த ரீதியில் அக்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. ஆனாலும் தற்போதைய நிலவரம் திமுக -விற்கு சாதகமா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடரும் கொலைகள், பெண்கள் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளுடன் திமுக -வின் ஊழல் போக்கால் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
விஜய் -ன் அரசியல் பிரவேசம்
விஜய் -ன் அரசியல் பிரவேசம் திமுக -விற்கு குறிப்பாக உதயநிதிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.அதிமுக -பாஜக கூட்டணி சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளது. ஆனால் அவை மட்டுமே இவர்களுக்கான வெற்றியை தீர்மானிக்கப்போவதில்லை. உண்மையில் திமுக -வின் வாக்கு வங்கி கூட்டணி கட்சிகள் மூலமாக 20% வரை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பான்மை தலித், சிறுபான்மையின, முஸ்லீம் வாக்கு வங்கிகள் திமுக -விற்கு கிடைக்கும் வாக்கு 20% ஆகும். இதில் பொதுமக்கள் வாக்கு 10% - இந்த 10% வாக்கு தான் மக்களிடையே அதிருப்தியாக உள்ளது.பேட்டி ஒன்றில் தமிழா தமிழா பாண்டியன் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் தவெக -வில் தொண்டர்கள்தான் அனைத்து செலவுகளையும் செய்கின்றனர். தற்போது விஜய் பிறந்தநாளில் கூட தவெக -கட்சியினுள் செலவாகியது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி -ன் பணம் தான்.அவர் இதை சும்மா ட்ரை பண்ணுவோமே என்றுதான் செந்தில் பாலாஜி செய்தார். அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது. ஆனால் எல்லா கட்சிகளும் தேர்தலின்போது பணத்தை வாரி இரைப்பார்கள் என்பது நன்கு அறிந்ததே. விஜய் ஒருவேளை ஏதேனும் கூட்டணியில் இணைந்தால் அவர்கள் பணம் தரலாம் ஆனால் அவர் கையிலிருந்து ஒரு ரூபாய் செலவு செய்யமாட்டார் . அவர் முழுக்க முழுக்க ஆதவ் ஆர்ஜூனாவையே நம்பி உள்ளார். விக்கிரவாண்டி மாநாடு ஆதவ் தந்த நிதியிலிருந்துதான் நடத்தப்பட்டது, ஆனால் தற்போது அளவுக்கு நிதி இல்லாத சூழல் உருவாகும்போல் இருக்கிறது. காரணம் ஆதவிற்கே இருக்கும் முகாந்திரம் அவரது மாமனார் வீடுதான். ஆனால் அவர் மனைவியோ தற்போது அரசியலே வேண்டாம் என்கிறாரா. இதனால் அவர் குடும்பத்தினுள் சிக்கல் உருவாகி அவர் பனையூரிலும் அவரது மனைவி போயஸ் கார்டனிலும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர் மனைவியை விட்டாலும் அரசியயலை விடமாட்டார்” எனக்கூறியுள்ளார் பாண்டியன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.