"தமிழனாக இருக்கும் அண்ணாமலை முன்பு இது நடந்திருப்பது கண்டனத்திற்குரியது...!" - கர்நாடகா திமுக.

"தமிழனாக இருக்கும்  அண்ணாமலை முன்பு இது நடந்திருப்பது கண்டனத்திற்குரியது...!"  - கர்நாடகா திமுக.
Published on
Updated on
1 min read


கர்நாடகாவில் ஷிவமொகா  மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது குறித்து முக செயலாளர் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார். 

அதில் அவர் கூறியதாவது,.... 

"கர்நாடக மாநிலத்தின் ஷிவமொகா  மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா  மற்றும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தின் போது அங்கு தமிழர்கள் அதிகம் வசிப்பதால் தமிழ் தாய் வாழ்த்து பாடத் தொடங்கினர்.

உடனடியாக ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தும்படி கூறியுள்ளார். அதன்படி தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தியுள்ளனர். பின்பு  அவர் கூறுகையில், தமிழனாக இருந்து அண்ணாமலை முன்பு இது நடந்திருப்பது கண்டனத்திற்குரியது  எனவும், இதை கர்நாடக மாநில திமுக வன்மையாக கண்டிக்கிறது என்றும் கூறினார். 

மேலும், இது குறித்து ஈஸ்வரப்பா மற்றும் அண்ணாமலை இருவரும் வருத்தம் தெரிவிக்காவிட்டால் திமுக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கர்நாடகா திமுக செயலாளர் ராமசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com