

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு வழி ஆகிவிடும் என்பது தான் உண்மை. திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -வின் நிலை அப்படி இல்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்தே பஞ்சாயத்துதான். பமாக -விலும் சூழ்நிலை சரியாக இல்லை. போதைக்குறைக்கு கரூர் சம்பத்திற்கு பிறகு தமிழக அரசியல் களமே மாற்றம் கண்டுள்ளது.
அதிமுக எப்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அப்போதிலிருந்து ஓபிஎஸ் தனது மவுசை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களை திரட்டி "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.
அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் பிதாமகராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அரசியல் ரீதியான பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டது பன்னீர் செல்வத்துக்கு பொருளாதார ரீதியான நஷ்டத்தை ஏற்படுத்தியது நாடறிந்த உண்மை. இந்த சலசப்புக்கு இடையில் ஓபிஎஸ் NDA -கூட்டணியிலிருந்து வெளியேறினார். ‘சுயமரியாதைதான் முக்கியம்’ எனக்கூறி வெளியேறிய அன்றே தமிழக முதல்வரை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்து “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை… நண்பனும் இல்லை..” என கூறியிருந்தது பெரும் சலசலப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது சகோதரர்களின் 224-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மரியாதை செலுத்தினார். அப்போது 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தை நினைவாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் "தமிழகம் மட்டுமல்ல இந்திய நாடு வல்லரசாக உலக அளவில் செயல்பட காரணமாக இருந்தவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களின் தியாகம் விலைமதிப்பற்றது. தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், "இன்றய சூழ்நிலையில், எல்லா கட்சிகளும் பிரிந்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அதிமுக பிரிந்து இருக்கிறது. அதைப்போல பாமக பிரிந்து இருக்கிறது. ராமதாஸ் - அன்புமணி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் பேசுகின்றனர். இதனை நான் சொல்லவில்லை. யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக இருப்பது என்பது மக்களின் கையில் தான் உள்ளது. அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். கழகத்தின் தொண்டர்கள் மூலமாக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால் அதனை தற்போது உருமாற்றி விட்டனர். திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்குவதற்கு அக்கட்சியில் இருந்த சில பொதுக்குழு உறுப்பினர்கள் தான் காரணம்.
தனக்கு ஏற்பட்ட நிலை இனிவரும் அதிமுக பொதுச் செயலாளர்களுக்கு ஏற்படக்கூடாது, என்பதற்காகத்தான் தொண்டர்கள் மூலமாக பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் விதிமுறையை புஎம்ஜிஆர் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த சட்டத்தை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம்" என பேசியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.