“ஊழலை விட இதுதான் தீங்கானது” - விசிக தலைவர் திருமாவளவன் சொல்வது என்ன?

சட்டத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.
vck leader thirumavalavan
vck leader thirumavalavan
Published on
Updated on
3 min read

திருச்சி;  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர் பேசியது,

“ஜூன் 14ம் தேதி, நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா ஸ்டேடியம்  அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் பேரணி தொடங்குகிறது. பேரணி டிவிஎஸ் ரவுண்டானா, மகாத்மாகாந்தி சிலை, பெரும்பிடுகு முத்திரையர் சிலை ஆகியவற்றை கடந்து மாநகராட்சி அலுவலகம் பேரணி முடிவடைகிறது. தமிழக முழுவதிலிருந்து முன்னணி பொறுப்பாளர்கள் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்கின்றனர்.

அகில இந்திய அளவில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு கோட்பாட்டை காக்க வேண்டும் என்று அரை கூவல்  விடுவதற்கான பேரணி தான் இந்த பேரணி. ஆர்.எஸ்.எஸ் போன்ற மதசார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம் தான் இந்தப் பேரணி. வெறுப்பு அரசியல் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை ஒன்றிய பாஜக அரசு கையாளுகின்றனர்.இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நலம் என்ற பெயரில் இந்துக்களை அணி திரட்டுவதற்காக அரசியல் செய்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தையும் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். சட்டத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.முத்தலாக் , வக்பு, திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு, அரசமைப்புக்கு எதிரானது.

அரசு அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.இந்தியாவில் பிற மாநிலங்களில் ஆர் எஸ் எஸ் பாரதிய ஜனதா, சங்பரிவார் அமைப்புகள் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.மசூதிகளை தகர்ப்பது தேவாலயங்களை தகர்த்தது பைபிள் குர்ஆன் போன்ற மத நம்பிக்கையாளர்களின் புனித நூல்களை எரிப்பது, மாட்டு கறி சாப்பிடுகிறார்கள் என்ற பெயரில் படுகொலைகளை செய்வது போன்ற கலாச்சாரம்மதத்தின் பெயரால்  திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது.இந்து மதத்தில் உள்ள நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்பது கோட்பாடு சட்டத்தின் வரைமுறை. இதேபோன்று அனைத்து மதத்தின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்பது சட்டத்தின் வரைமுறை.

குடியுரிமை திருத்த சட்டம் அது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவது தான் விடுதலை சிறுத்தை ஏற்றுக் கொண்ட பேரணி நோக்கமாகும்.அந்நிய முதலீடுகளை கொண்டு வந்து குவிப்பதற்காக அங்குள்ள இயற்கை வளம் கனிம வளம் உள்ளிட்ட இயற்கை வளம் அனைத்தையும் சுரண்டுவதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டம் என் 370 நீக்கம் செய்தார்கள் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை அதனால் அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய ஒன்றிய அரசு எந்த மதத்தின் சொத்து நிர்வாகத்திலும் தலையிடாத போது  இஸ்லாமியர்களின் சொத்து நிர்வாகத்தை மட்டும் வெளிப்படையாக தலையீடு செய்வது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது மதச்சார்பின்மைக்கு எதிரானது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டார்கள். மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார் அவருக்கு இடம் தராத ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மண்ணாக தமிழ் மண் தமிழ் நாடு வழங்குகிறது ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஒரு இலக்காக வேண்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகவேல் யாத்திரை முருக பக்தர்கள் மாநாடு இதுபோன்ற செயல்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறை வேண்டாம் மதத்தின் பெயரால் சமூகப் பிரிவினை வாதம் வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காக அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் எல்லாம் பேரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்டுள்ள விமான விபத்தில் ஒருவர் மட்டுமே பிழைத்திருக்கிறார் இரண்டு விமானிகள் உட்பட 12விமான பணியாளர்களும், பயணிகளும் முற்றாக கருகி இறந்துள்ளனர். எப்படி ஆறுதல் சொல்வது என தெரியவில்லை.

டாட்டா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. எத்தனை கோடி கொடுத்தாலும் சரி செய்ய முடியாது இழப்பு, சகித்துக் கொள்ள முடியாது. கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது இந்த பேரணி முடிவு செய்யப்பட்டது.

பாஜக தேர்தலை பயன்படுத்தி முருகா பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. பாஜகவின் அரசியல் கால் வைக்க கூடாது. கூட்டணி கட்சிகள் தலைமைத்துற்ற கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அந்த நேரத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை அடிப்படையில் உள்ளது.நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது. கூட்டணியின்  நலம் முதன்மையானது.

திமுகவுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ அதே போல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது. கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பு நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறோம், கோரிக்கையாக வெளிப்படுத்தி இருக்கும் இன்றைக்கும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான காலம் இது இல்லை.  மாயத் தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கின்றார்கள் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த பார்க்கின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் வெளியே உள்ளார்கள் அவர்களையே உள்ளே இனைக்கவில்லை. அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை வந்துவிட்டார். கூட்டணி தயாராக இல்லை அதிமுக இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை.

அண்ணாமலை இல்லாமல் தேர்தல் நடப்பது  அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்து மற்ற கட்சிகளையும் இணைத்து தேர்தலை சந்திக்கக் கூடாது என அவர் நினைக்கிறார்.

நாங்கள் சமமான வலிமை  பெரும் வரை இதுபோன்ற நிபதனைகளை கூற முடியாது. நிரந்தரமாக டாஸ்மாக்களில் மூட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை இந்த தேர்தலில் ஆவது திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை முழுவதும் குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தற்காலிகமாக மூடுதல் என்பது இது தற்காலிகமான நிலைப்பாடு இதில் உடன்பாடு இல்லை.தமிழ்நாடு மட்டிலும் இல்லை தேசிய அளவில் மதுக்கடைகளை  மூட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு ஆகும்.

காங்கிரஸ் மது விளக்கு கொள்ளவே தீவிரமாக கையில் எடுக்க வேண்டும்.  இதனால் இளந்தலைமுறையின்ஆற்றல் சிதைகிறது. எங்கெல்லாம் அரசு இருக்கிறதோ அங்கு ஊழல்  உள்ளது.ஊழல் என்பதை சொல்லி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது  என்பது சொற்பமான நிகழ்வுகள் தான்.

அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டு சொல்லி இதுவரை எந்த ஆதாரமும் வெளியிடவில்லை. ஊழல் குற்றச்சாட்டு  இருந்தால் முன் வைக்கட்டும் மக்களிடத்தில் எடுத்து வைக்கட்டும், விசாரணைக்கு கொண்டு செல்லட்டும்

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானதுஎன தெரிவித்தார்.பேட்டியின் போது தலைமை நிலைய செயலாளர்  பாலசிங்கம், முதன்மைச் செயலாளர் பாவரசு, திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில செயலாளரும் திருச்சி மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் இருந்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com