ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும்! தேர்தலில் களமிறங்கிய மனைவி பொற்கொடி.. -பாதுகாப்பு கோரும் விசிக தலைவர் திருமா

‘என்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என்று பொற்கொடி..
armstrong wife porkodi
Published on
Updated on
2 min read

தேர்தல் களத்தில் அடுத்தடுத்த நகர்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டு, மனு அளிக்க தொடங்கி, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், மனுத் தாக்கல் செய்ய இன்னும் நான்கு வேலை நாட்களே எஞ்சியுள்ளன. இதனால் வேட்பாளர்கள் ஒருபுறம் மனுத் தாக்கல், மறுபுறம் அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடக்கி உள்ளனர்.

இந்தத் தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாக, கடந்த 2024-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழாக்கத்தை உள்ளுக்கிய முக்கிய சம்பவமாகும். அந்த படுகொலை குறித்த விசாரணை இன்னும் நடந்து வருகிறது. அரசியல் காரணங்களாக அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்களா எனும் கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு பின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைமை பொறுப்புகள் கட்சியின் உறுப்பினர் வழக்கறிஞர் பி.ஆனந்தன்-க்கு சென்றது. பின் கட்சியில் நடந்த பிளவின் காரணமாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி. நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளார் பொற்கொடி. அவருக்கு சென்னை திரு.வி.க நகர் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுவதாக அறிவித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘என்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என்று பொற்கொடி கூறியுள்ளார். இதையடுத்து அவர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் மிகப் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. வடசென்னையில் அதிக வரவேற்பை பெற்றிருந்த அவரின் கணவர் ஆம்ஸ்ட்ராங் போலவே இவருக்கும் ஆதரவு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் களம் இறங்கியுள்ளது.

அதனையடுத்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று மக்களை சந்தித்து வருகிறார். தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், “பொற்கொடி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்  தைரியமாக பொது வாழ்க்கைக்கு வந்ததை நான் பாராட்டுகிறேன். அதே போல் அவர் உயிருக்கு அச்சுறுத்தல்  இருக்கிறது. அவருக்கு பாதுகாப்பு தேவை, அரசியலில் ஒரு இடம் தேவை, அதிமுக அப்படி ஒரு இடத்தை அளித்திருந்தால் அதை வரவேற்கிறோம்” என்றும் தெரிவித்திருந்தார்.

முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பின் அவரது மனைவி மற்றும் அவரது மகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அப்போது நடந்த படுகொலை கருத்தில் கொண்டு அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தற்போது அவரது மனைவி பொற்கொடியின் அரசியல் வருகை பெரும் சவாலானது எனவே அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்வில் வந்திருப்பதைப் பாராட்டியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com