
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியை திமுகவுடன் இணைத்து கொண்ட நிலையில் இந்த மாதம் 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதிவு ஏற்க உள்ளார். இந்த புதிய பயணத்தை நடிகரும் தனது நண்பருமான ரஜினியுடன் நேரில் சென்று பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன்.
இந்த சந்திப்பில் தான் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்ட கடிதத்தை ரஜினிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன், சந்திப்பின் போது ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை தனது சேமிக்க வலைதள பக்கத்தில் பகிர்ந்து “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்துடன் பகிர்ந்தேன் மகிழ்தேன்” என பதிவிட்டுள்ளார். இதே போல் மக்கள் நீதி மையம் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு முன்பும் ரஜினியை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.