திமுக -வில் வலிமை பெறுகிறாரா கனிமொழி!? அறிவாலயத்தில் அமரச்செய்த ஸ்டாலின்…!

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எனக்காக...
kanimozhi in anna arivalayam
kanimozhi in anna arivalayam
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் 2026 தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகிறது. கரணம் இந்த தேர்தல் கடந்த 50 ஆண்டு கால தமிழக வரலாற்றை போல இது வெறும் திராவிட காட்சிகளுக்கான போட்டி  அல்ல. புதிய வரவாக தவெக உள்ளது. அதிமுக -பாஜக கூட்டணி அமைந்துள்ளது.எனவே இந்த தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தேர்தலாக அமையக்கூடும்.

இந்நிலையில் திமுக -வும் தனது கட்சியில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனியறை ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே  துரைமுருகனுக்கு தனியறை அளிக்கப்பட்டதை போலவே கனிமொழிக்கும் தனியறை வழங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து எம்.பி கனிமொழி பதிவிட்டிருந்த X -தள பதிவில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய அலுவலக அறையை கழகத் தலைவர் - முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன்,  துணை பொதுச் செயலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ் பாரதி, கழக செய்தி தொடர்பு தலைவர் திரு.இளங்கோவன், இணை அமைப்புச் செயலாளர் திரு. முன்பக்கம் கலை, துணை அமைப்புச் செயலாளர் திரு. ஆஸ்டின்,  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.  பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தூத்துக்குடி எம்.பி -யும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகனை போலவே தனி அறை ஒதுக்கப்படுவதை சாதாரணமாக கடந்து போக முடியாது. தேர்தல் சமையத்தில் பல முன்னெடுப்புகளை திமுக கையிலெடுத்து வருகிறது “உடன் பிறப்பே வா” என்ற பெயரில் முதல்வர் 3 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார். மேலும் கட்சியில் பல மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். அதன் தொடர்ச்சிதான் கனிமொழிக்கு தனி அறை வழங்கப்பட்டதும். இதன் மூலம் கட்சியில் கனி மொழி மேலும் வலிமை பெறுவதாக தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com