
2026 தேர்தல்உண்மையில் இன்னும் 10 மாதங்களுக்கு தமிழ் நாடு அல்லோலப்படும் என்பதில் ஐயமில்லை. திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ளது.
“எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான் “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான். ஆனால் அதிமுக விற்கு அது பேரழிவு என்கின்றனர் ஆர்வலர் பலர்.
ஆனால் களத்தில் தேர்தல் வேலைகளை இன்னும் முடுக்கி விடாமல் இருக்கிறது அதிமுக. காரணம் பாஜக -வின் திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் கொள்கைக்கு எதிர்க்க இருப்பதால் அதை வைத்து வாக்கு சேகரிக்க முடியாது என எடப்பாடிக்கு நன்றாக தெரியும் அதனால்தான் இன்னமும் அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் இந்த கூட்டணி களத்தில் வலுபெறவில்லை. தமிழகத்தில் பாஜக -வின் ஆதரவு வாக்குகள் மிக மிக குறைவு, நீட் திணிப்பு, ஹிந்தி திணிப்பு, AIMs விவகாரம், கீழடி பிரச்சனை, மைக்கேல் பட்டி மதமாற்ற விவகாரம், கல்வி நிதி நிறுத்தி வைப்பு விவகாரம் என பல சிக்கல்கள் பாஜக -வுக்கு உண்டு. அதோடு மட்டுமின்றி சித்தாந்த ரீதியாகவும் சாதி மத அடிப்படையிலான அரசியலை பாஜக கைகொண்டுள்ளது. ஆகவே பாஜக -வோடு இணைந்து இருப்பதால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் அதிமுக தான் சுமக்க வேண்டியிருக்கும்.
ஏற்கனவே பல மாநிலங்களில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் அதிமுக -வினுள் நுழைந்து அதனை பாஜக அழித்துவிடும் என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பாஜக தலைவர்கள் பல மேடைகளில் பேசி வருவதை போல “தமிழகத்தில் பாஜக கூட்டணி அமையும்” என்பதை நிச்சயம் செய்து காட்டுவார்கள் இதன் மூலம் அதிமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். மேலும் மத்தியில் ஆளும் பாஜக எடப்பாடியை அச்சுறுத்தியே கூட்டணியில் தக்க வைத்துள்ளதாகவும் பல கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆனால் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். பாஜக -விற்கு பயந்து கட்சியை இழக்கப்போகிறாரா? அல்லது ஆட்சியை இழக்கப்போகிறாரா? இபிஎஸ் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.