இன்ஸ்டாகிராம் பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்.. வேறொருவரை திருமணம் செய்து ரீல்ஸ் பதிவிட்ட மனைவி.. கண்ணீர் மல்க புகாரளித்த கணவர்!

மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் நீண்ட தூரம் என்பதால் வாரத்திற்கு ஒரு முறை தான் அபிஷா வீட்டிற்கு
இன்ஸ்டாகிராம் பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்.. வேறொருவரை திருமணம் செய்து ரீல்ஸ் பதிவிட்ட மனைவி.. கண்ணீர் மல்க புகாரளித்த கணவர்!
Published on
Updated on
1 min read

குமரி மாவட்டம் மயிலாடி பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான அஜித் குமார் இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் குலசேகரம் பகுதியை சேர்ந்த 22 வயதான அபிஷா என்ற பெண்ணுக்கும்  கடந்த 2022- ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்குப் பின் கணவர் அஜித் குமார் மனைவியின் வீட்டிலேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.மனைவி அபிஷாவும் அருமனைப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்திருக்கிறார். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் நீண்ட தூரம் என்பதால் வாரத்திற்கு ஒரு முறை தான் அபிஷா வீட்டிற்கு வந்துள்ளார். அதன்படி கடந்த வாரம் 2 -ம் தேதி வேலைக்கு செல்வதாக புறப்பட்ட அபிஷா 9ஆம் தேதி மீண்டும் வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

இதனிடையே 6-ம் தேதி மனைவியை பார்க்க அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு ஆசையாக சென்றுள்ளார் அஜித் குமார். அப்போது மனைவி அபிஷா மருத்துவமனையில் இல்லை என்றும்  உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வாலிபர் ஒருவருடன் அவசர அவசரமாக சென்றதாகவும் மருத்துவமனையில் அபிஷாவுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அஜித்குமார் மனைவியை காணவில்லை என மனைவியின் செல்போனிற்கு தொடர்பு கொண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல்வேறு பகுதிகளில் அபிஷாவை தேடியுள்ளார். எங்கு தேடியும் அபிஷாவும் அவரை பற்றி எந்த வித தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது.

இந்நிலையில் அஜித் குமாரின் நண்பர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பார்த்த வீடியோ ஒன்றை அவருக்கு காண்பித்துள்ளார்.அதில் அபிஷாவும் ,மற்றொரு நபரும் உறவினர்கள் சூழ புது மணத்தம்பதிகள் போல கழுத்தில் மாலை அணிந்து திருமணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். மேலும் அபிஷா வேகத்துடன் தலைகுனிந்து தாலி கட்டி கொண்டுள்ளார்.

இதைப் பார்த்து கதறிய அஜித்குமார் அருமனை காவல் நிலையம் சென்று வீடியோவை காண்பித்து மனைவியை மீட்டு தருமாறு புகாரளித்துள்ளார். போலீசார் வீடியோவை ஆதாரமாக வைத்து திருமணம் செய்து கொண்ட நபரையும்  அபிஷாவையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அஜித் குமாரின் புகாரின் பேரில் அபிஷா மாயம் என வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.அவர்கள் மீட்கப்பட்டால் தான் - திருமணமானதை மறைத்து வைத்து அபிஷா மற்றொரு திருமணம் செய்து கொண்டாரா? வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா ? என்ற உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com