கரூர் சோகம்; மக்களின் உயிரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்..! - வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்...!
திமுக, தவெக இரு தரப்பும் மக்களின் உயிரை வைத்து அரசியல் செய்ய கூடாது வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் பெருந்துயரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சதிஷ்குமார், தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதை தான் கரூர் உயிரிழப்புகள் எடுத்துக்காட்டுவதாக குறிபிட்ட வழக்கறிஞர் சதிஷ்குமார் தங்களுடைய சங்கம் சார்பில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அளித்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு, தவெக தலைவர் விஜய்யும் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அறிவுறுத்திய வழக்கறிஞர், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ஒரு நபர் ஆணைய விசாரணையால் எந்த பயனும் இல்லை என தெரிவித்தார்.
கரூர் துயர சம்பவம் போன்ற விபரீதத்தை 1977 ம் ஆண்டு முதல் திமுக செய்து வருவதாக குறிப்பிட்ட அவர் தவெக கூட்டத்திலும் அதை திமுக செய்துள்ளதாக இது மிக மோசமாக அரசியல் என்றும் மக்களின் உயிரை பறிக்கும் வகையில் திமுக, தவெக அரசியல் செய்வதை ஒரு ஏற்க முடியாது என தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.