"முன்ஜாமீன் முன்னேற்றக் கழகத்தை.. அன்புடன் எச்சரிக்கின்றோம்" - 'பஞ்சரான பஞ்ச் வசனம்' என திமுகவைச் சீண்டிய தவெக!

பஞ்சரான பஞ்ச் வசனங்களைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும் என்று அன்புடன் எச்சரிக்கின்றோம். #முன்ஜாமீன்முன்னேற்றக்கழகம்
DMK vs TVK
DMK vs TVK
Published on: 
Updated on: 
2 min read

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பில் மீண்டும் சோதனை நடைபெற்றுவருகிறது. நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல்கள வெளியாகியுள்ளன. இதற்கு தனது எதிர்ப்பு கருத்தினை பதிவு செய்யும் வகையில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைதளப்பக்கத்தில் காட்டமாக விமர்சித்து ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டார்.

குறிப்பாக அந்த பதிவில், பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!" எண்டு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தவெக-வின் IT Wing பக்கத்தில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர்களது X தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, "மூலை முடுக்குகள் எல்லாம் ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல் சொத்துகள். ஆனால், எங்களை ஒன்றும் செய்யவே முடியாது என்று வீரவசனம் வேறு. முன் ஜாமீன் முன்னேற்றக் கழகம் ஊழல் வழக்குகளில் மூச்சுத் திணறிக்கொண்டே முட்டாள்தனத்தின் உச்சமான பஞ்ச் வசனங்களை உதிர்க்கிறது. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அதிர்ச்சியே இன்னும் தாங்கவில்லை. இனி தங்களுக்கு ஆட்சி என்பதே எட்டாக் கனி என்பதையும் உணர்ந்ததால்தான் இரண்டாம் இடம் கிடைத்ததே பெரும்பாடு என்று கொசு அடித்துக் கொண்டிருக்கின்றனர் கொத்தடிமைகள். திருச்சியில் மட்டுமன்று. திரும்பிய பக்கமெல்லாம் முன்ஜாமீன் முன்னேற்றக் கழகத்தை முடித்துவிடவே தமிழக மக்கள் முடிவுடன் இருக்கின்றனர். எனவே, பஞ்சரான பஞ்ச் வசனங்களைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும் என்று அன்புடன் எச்சரிக்கின்றோம். #முன்ஜாமீன்முன்னேற்றக்கழகம்" என்று தங்களது விமர்சனத்தை சற்று அதிக காட்டத்துடன் பதிவிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com