"Roadshow நடத்தலாமா.. Raidshow நடத்தலாமா?" - கே. என். நேரு வீட்டில் அதிரடி சோதனை! 'ரீல்ஸுக்காக நடத்தப்படும் ரெய்டு' என ஸ்டாலின் விமர்சனம்!

த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!.
KN Nehru house raid
KN Nehru house raid
Published on: 
Updated on: 
1 min read

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் சோதனை நடைபெற்றுவருகிறது. நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல்கள வெளியாகியுள்ளன. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைதளப்பக்கத்தில் காட்டமான விமர்சனத்தையும், இந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையையும் கண்டித்து பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்த சம்பவம் சமீபத்தில் நடந்திருக்க தற்போது திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும், இவரது வீடு மட்டுமின்றி சென்னையில் நேருவின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X தளத்தில், "பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!" என்று தனது காட்டமான பதிவினை X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com