கோவை, சரவணம்பட்டி மாணவர் விடுதிகளில் சோதனை - போலீஸ் அதிரடி

மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததை தொடர்ந்து - கோவையில் விடுதிகளில் காவல் துறையினர் போதைப் பொருள்கள் உள்ளதா ? என்று அதிரடி சோதனை !!!
kovai_mens_hostel
kovai_mens_hostel
Published on
Updated on
1 min read

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள 15 மாணவர் விடுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. விடுதிகளின் அனைத்து அறைகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, போதைப் பொருள் எதுவும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த சோதனை குறித்து காவலர்கள் கூறுகையில்,

மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வருங்காலங்களில் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்று தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் மாணவர்கள் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com