தனித்து களமிறங்கிய இடதுசாரிகள்.. வேட்பாளர்கள் அறிவிப்பு! 5 முனை போட்டியாக மாறுகிறதா தேர்தல் களம்?

இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் இடது சாரிகள் தனித்து போட்டியிடுவதாகவும் இடதுசாரிகள் தெரிவித்திருந்தனர்.
CPM CPI candidates
Published on
Updated on
1 min read

அக்டோபர் 6ம் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் இடது சாரிகள் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்திருந்தனர். இடது சாரி கட்சிகளின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பங்கேற்றனர். மேலும் CPI மற்றும் CPM ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் பெரும்பான்மை இல்லாத விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்தது. இதனைத்தொடர்ந்து, திமுகவுடனான கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய முஸ்லிம் லீக் கட்சி மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கட்சியினர் தங்களது ஆதரவினை அளித்தது. இடதுசாரிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கு பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்தனர். 

இதனைத்தொடர்ந்து, தவெக தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகிய MLA-க்கள் தங்களது பதவியை ஒரு மாதத்திற்குள்ளாக ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்தனர். இதனால் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும் தவெக சார்பில் ராஜினாமா செய்த அதே வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். மேலும் அதிமுக, திமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பளர்களை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இடதுசாரிகளின் ஆதரவு யாருக்கு என்ற விவாதங்கள் எழ தொடங்கியது. தேர்தல் கூட்டணியில் ஆதரித்த திமுகவிற்கா? அல்லது தவெகவிற்கா? என்ற கேள்விகள் எழுந்தன.  ஆனால் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் இடது சாரிகள் தனித்து போட்டியிடுவதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்திருந்தனர். அதனால் தேர்தல் களம் 5 முனை போட்டியாக மாறியது. 

தற்போது இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது இடதுசாரி கட்சிகள். தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார். மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) சார்பில் சுகந்தி போட்டியிடுகிறார். இவர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார்

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தனித் தொகுதிகளான இந்த இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com