சுற்றுப் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி வரும் 2026 தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அண்ணா திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் இருந்து தனது தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இன்று தொடங்கி இந்த மாதம் 23 தேதி வரை பரப்புரை பயணத்தை மேற்கொள்கிறார்.
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள உள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ளார். அடுத்து மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளை கேட்டறியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, கதி சிலையின் அருகே ரோடு ஷோ நடத்தி மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்க உள்ளார்.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மத்திய அமைச்சர் எல். முருகன், மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரியாக மாலை 5 மணியளவில் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணத்தின் முதல் பரப்புரை கூட்டம் நடைபெறவுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.