கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு வந்த கடிதம்! “நான் யார் தெரியுமா?” - MLA மிரட்டுவதாக.. பெண் ஊழியர் புகார்?

"என்னை பற்றி தெரிந்துகொண்டு தான் இந்த மாவட்டத்திற்கு வந்தாயா? இங்கு எவ்வளவு நாளாக இருக்கிறாய்.."
kallakurichi collector
Published on: 
Updated on: 
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்குநர் அ.லலிதா என்பவர் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்குநராக பணியேற்றேன். பணி முன்னேற்றத்தில் மாவட்டம் 37 வது இடத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. கடந்த 7 மாத காலமாக கடுமையாக இரவு பகல் பாராமல் வேலை செய்து, மாவட்டத்தின் Overall Ranking-ஐ 8-வது நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். இதற்காக தலைமைச் செயலாளர் அவர்களால் கூட பாராட்டப்பட்டேன்.

தான் பணி ஏற்றபோது மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 40 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் பதிவு புதுப்பிக்கப்படாமல் இருந்ததாகவும், 6 அல்லது 7 வருடங்களுக்கு மீதமுள்ள கூட்டமைப்புகள் புதுப்பிக்கப்படாமல் இருந்ததாகவும், தற்போது அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளில் 411 ஊராட்சிகள் Bulk Loan பெற்று, வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு, இந்தியன் வங்கி Zonal Manager உதவியுடன் பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 18 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.32 மணிக்கு, ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர், வசந்தம் கார்த்திகேயன், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறியுள்ளார். திருக்கோவிலூர் வட்டாரம், தகடி ஊராட்சியில் காலை உணவுத் திட்டத்தில் Cook வேலை செய்து வந்த தேவிபாலா என்ற பெண்ணை ஏன் வேலையில் இருந்து எடுத்தீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு வட்டார இயக்குநர், "கிராம ஊராட்சி அளவில் காலை உணவுத் திட்டத்தில் Cook போடுவதற்கு எனக்கு அதிகாரமில்லை. அதற்கென தனியாக கிராம அளவிலான கண்காணிப்பு குழு உள்ளது. அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் எனக்கு சம்பந்தமில்லை" என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.

அதற்கு MLA வசந்தம் கார்த்திகேயன், "நான் யார் என்று தெரியுமா? என்னை பற்றி தெரிந்துகொண்டு தான் இந்த மாவட்டத்திற்கு வந்தாயா? இங்கு எவ்வளவு நாளாக இருக்கிறாய்? நான் இங்க 20 வருடம் MLA தெரியுமா?" என்று மிகவும் சத்தமாக கத்தி பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் சாதி பார்த்து வேலை செய்வதாகவும், அதனால் தான் அந்த பெண்ணை வேலையை விட்டு எடுத்ததாகவும் குற்றம் சாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் சம்பந்தமில்லாமல் பேசுவதால் கருதி அந்த உரையாடலை தான் Record செய்ததாகவும், பொறுமையாக பேச முயற்சித்தும் MLA மிக கடுமையாக பேசியதாகவும் புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து, அக்டோபர் 19ம் தேதி, அன்று மதியம் MLA தரப்பில் இருந்து மீண்டும் அழைப்பு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த அழைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர், வேல் பழனியம்மாள் என்பவர் தொடர்பு கொண்டு, “நீங்கள் எதற்கு சாதி பார்த்து தேவிபாலா என்ற பெண்ணை வேலையில் இருந்து நீக்கினீர்கள் எனக் கேட்டுள்ளார்.

மேலும், தனக்கு எதிராக MLA வசந்த் கார்த்திகேயனும், விசிக வேல் பழனியம்மாளும் இணைந்து, Character-ஐ Spoil செய்யும் வகையில்.. தவறான செய்திகளை WhatsApp மூலமாகவும், Social Media-வில் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் இருவரின் தனிப்பட்ட நோக்கம் என்னவென்று எனக்கு தெரியாது என்றும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் நாத் அப்பணியில் இதுவரை யாரையும் பணியமர்த்தவில்லை என்றும், அதற்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை சொல்லியும் என்மீது அபாண்டமான குற்றசாட்டுகளை வைப்பதாகும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க எவ்ண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்